Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னங்க சொல்றீங்க”.. ஜஸ்பிரித் பும்ரா உடல்நிலை குறித்து ஹர்திக் தந்த அப்டேட்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மொஹாலி: ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து ஹர்திக் பாண்ட்யா முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

208 ரன்களை என்ற இமாலய இலக்கையும், இந்தியாவின் மோசமான பவுலிங் மற்றும் ஃபீல்டிங் காரணமாக ஆஸ்திரேலியா விரட்டியது.

இந்தியாவின் சொதப்பல்

இந்தியாவின் சொதப்பல்

இந்தியாவின் முன்னணி பவுலர்களான புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 52 ரன்களையும், ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதற்கெல்லாம் மேலாக உமேஷ் யாதவ் 2 ஓவர்களிலேயே 27 ரன்களை வாரி வழங்கியதால், அதன்பின்னர் அவருக்கு ஓவரே கொடுக்கவில்லை.

ஏன் பும்ரா இல்லை

ஏன் பும்ரா இல்லை

முதல் டி20 போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நாயகனான ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது எந்தளவிற்கு பின்னடைவாக இருந்தது என்பது தெரிந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, சில தசை பிடிப்புகள் உள்ளது என்ற காரணத்தால் அவர் உட்காரவைக்கப்பட்டார். எனினும் அவர் குணமடைந்து வந்துவிடுவார் என கூறியிருந்தனர்.

பாண்ட்யா தந்த அப்டேட்

பாண்ட்யா தந்த அப்டேட்

இந்நிலையில் இதுகுறித்து ஹர்திக் அப்டேட் கொடுதுள்ளார். அதில், பும்ரா இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பது அனைவருக்குமே தெரியும் தான். ஆனால் அதற்காக மற்றவர்களையும் குறை சொல்ல முடியாது. நாட்டிலேயே இந்த 15 பேர் தான் சிறந்தவர்கள் என தேர்வாகியுள்ளோம். அதனால் தான் இங்கு விளையாடுகிறோம்.

இன்னும் நேரம் தேவை

இன்னும் நேரம் தேவை

ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு தேவை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, தேவையான நேரத்தை கொடுக்க வேண்டுமல்லவா??, ஒருவேளை அவசரப்படுத்தினால் அவருக்கு அழுத்தம் ஏற்படக்கூடும். எனவே அவருக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஓய்வுக்கு பின் நிச்சயம் நல்ல கம்பேக் தருவார் என பாண்ட்யா கூறியுள்ளார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அடுத்ததாக வரும் செப்டம்பர் 23ம் தேதியன்று 2வது டி20 போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியிலும் ஜஸ்பிரித் பும்ரா இல்லையென்றால் இந்தியாவுக்கு பெரும் அடியாக இருக்கும் என்ற சூழலில் ஹர்திக் பாண்ட்யா இப்படி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 21, 2022, 17:52 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+