Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாடிய 4வது இன்னிங்சிலேயே ரிங்கு சிங் படைத்த சாதனை.. கோலி, ரிஷப் பண்ட் ரெக்கார்ட் தகர்ப்பு

மும்பை : டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் சாதிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஒன்று தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடாமல் மௌனம் காத்தது.

இன்னொன்று இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இல்லாதது. இது இரண்டும் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. டி20 கிரிக்கெட்டின் வடிவமே தற்போது மாறிவிட்டது.

Ind vs aus 2nd t20 - Rinku singh created terrific record in his just 4th innings

ஒரு காலத்தில் 170 ரன்கள் அடித்தால் அதனை எளிதாக தற்காத்துக் கொண்டு விடலாம். ஆனால் இப்போது 170 என்ற இலக்கை 15 வது ஓவர்களில் இரண்டாவதாக சேசிங் செய்யும் அணி விட்டு விடுகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அனைத்து கட்டத்திலும் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் தேவைப்பட்டனர். அதற்கு விடையாக தான் தற்போது கிடைத்திருக்கிறார் 26 வயதான ரிங்கு சிங். தற்போது கீழ் வரிசையில் விளையாடி வருகிறார்.

ஆட்டத்தின் இறுதியில் களத்திற்கு வந்து முதல் பந்திலே அடித்து ஆடக்கூடிய வீரராக இந்த பணி செய்வது மிகவும் கடினம். ஆனால் அதனை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பக்காவாக செயல்படுத்தி வருகிறார் ரிங்கு சிங். இதுவரை 7 t20 போட்டிகளில் களம் இறங்கி நான்கு முறை பேட்டிங் செய்திருக்கிறார்.

Ind vs aus 2nd t20 - Rinku singh created terrific record in his just 4th innings

ஆனால் அதற்குள்ளே ரிங்கு சிங், கோலி, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் ரெக்கார்டை முறியடித்திருக்கிறார்.

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக கடைசி ஓவரில் அதிக முறை 20 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா ஐந்து முறையும், யுவராஜ் சிங் நான்கு முறையும், சூரியகுமார் யாதவ் மூன்று முறையும், ரிங்கு சிங் இரண்டு முறையும், ஜடேஜா இரண்டு முறையும் கடைசி ஓவரில் இந்தியாவுக்காக 20 ரன்கள் அடித்திருக்கிறார்கள்.

Ind vs aus 2nd t20 - Rinku singh created terrific record in his just 4th innings

மற்றவர்கள் அனைவருமே ஒருமுறைதான் அடித்திருக்கிறார்கள். களமிறங்கிய நான்காவது இன்னிங்சிலேயே இத்தகைய சாதனையை ரிங்கு சிங் படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ரிங்கு சிங் தொடர்ந்து இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Story first published: Monday, November 27, 2023, 13:19 [IST]
Other articles published on Nov 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+