Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: பிளேயிங் 11.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வின் என்ட்ரி

அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால், அஸ்வினை அணியில் சேர்த்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்தியா அணியின் பிளேயிங் லெவன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ரோஹித் சர்மா இந்த தொடரின் முதல் போட்டியின் போது விடுப்பில் இருந்தார். அவர் தற்போது இரண்டாவது போட்டியில் அணியில் இணைந்து இருக்கிறார். சுப்மன் கில் முதல் போட்டியில் காயத்தால் விலகி இருந்தார். அவர் தற்போது காயம் குணமாகி அணியில் சேர்ந்து இருக்கிறார். இந்த இரண்டு மாற்றங்களும் எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் அஸ்வினை அணியில் சேர்த்தது தான். வாஷிங்டன் சுந்தர் சுழற் பந்து வீசும் பேட்டிங் ஆல் - ரவுண்டர் என்பதால் அவரே இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அஸ்வினுக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர்கள் சிலரும் கூறி இருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்த்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. இது ஆஸ்திரேலியா அணிக்கும் அதிர்ச்சி அளித்து இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் அஸ்வின் பந்து வீச்சில் பல முறை விக்கெட்களை இழந்து உள்ளனர். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சில் அதிக முறை விக்கெட்களை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் - உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலான்ட்

Story first published: Friday, December 6, 2024, 9:28 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+