Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை டீமை விட்டு தூக்கிய ரோஹித்.. உள்ளே வந்த அந்த வீரர்.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

ராஜ்கோட் : இந்திய அணியில் இடம் பெற்ற அஸ்வின் ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கான அணியை இன்னும் இறுதி செய்யவில்லை. உலகக்கோப்பை உத்தேச அணியில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் அக்சர் பட்டேல் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்த்ரில் யாராவது ஒருவர் 2023 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது.

IND vs AUS 3rd ODI : This is the reason behind Ashwin dropped by Rohit Sharma

ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அஸ்வின் ஆடினார். அந்த இரண்டு போட்டிகளிலும் அஸ்வின் ஆட்டத்தில் எந்த குறையும் சொல்ல முடியாத வகையில் இருந்தது அவரது .செயல்பாடு. மொத்தம் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார் அவர்.

அந்த காரணத்தால் அஸ்வின் தான் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வாஷிங்க்டன் சுந்தரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணியில் சேர்த்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

வாஷிங்க்டன் சுந்தர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சீனா செல்ல வேண்டிய நிலையில், அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அஸ்வின் நன்றாகவே செயல்பட்ட நிலையில் அவரை மூன்றாவது போட்டியில் ஏன் ஆட வைத்து இன்னும் பயிற்சி அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஸ்வின் உலகக்கோப்பையில் ஆடப் போகிறார் என நினைத்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் கேப்டன் ரோஹித் சர்மா செய்த இந்த மாற்றத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Story first published: Wednesday, September 27, 2023, 14:01 [IST]
Other articles published on Sep 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+