ஹாபர்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மூன்று அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு இருக்கின்றது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கியுள்ள இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் முதலில் பந்து வீசப் போகின்றோம்.

இந்த ஆடுகளத்தில் பந்து இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிற்க்கு வருகிறது.இதன் மூலம் இரண்டாவதாக பேட்டிங் செய்வது சாதகம் என நினைக்கின்றேன். நாங்கள் ஒரு தருணத்தில் ஒரு போட்டி என்ற படி தான் அனைத்தையும் அணுகுகின்றோம். இந்த போட்டி மட்டுமல்ல எங்களுக்கு அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் பதிலாக ஜித்தேஷ் சர்மாவும், ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங்கும், குல்திப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், இந்த ஆடுகளம் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமானது தான்.
அதனால் டாஸ் பெரிய பிரச்சனை கிடையாது. நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்று பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வோம்.எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹேசல் ல்வுட் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சென் அபௌட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று மிட்செல் மார்ஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இன்றைய ஆட்டத்திலும் மேக்ஸ்வெல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.