வேக வேகமாக நடுவரிடம் சண்டைக்கு சென்ற ரஹானே.. கோபம் அடைந்த இந்திய வீரர்கள்.. அப்படி என்ன நடந்தது?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே நடுவரிடம் சண்டைக்கு சென்றது பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்து பேட்டிங்கில் திணறிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 195 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

திணறல்
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாம் சிறப்பாக அமைந்தது. முக்கியமாக இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அஸ்வின் 3 விக்கெட் எடுக்க, இன்னொரு பக்கம் பும்ரா 4 விக்கெட் எடுத்தார். அறிமுக வீரர் சிராஜும் 2 விக்கெட் எடுக்க ஜடேஜா கடைசி விக்கெட்டை எடுத்தார்.

அம்பயர்
ஆனால் இந்த போட்டியில் நடுவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தவறான முடிவுகளை அடுத்தடுத்து வழங்கி நடுவர்கள் திணறினார்கள். சிராஜ் ஓவரில் மார்னஸ் எல்பிடபிள்யூ ஆகி இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. அம்பயர்ஸ் கால் என்பதால் டிஆர்எஸ்ஸிலும் இதற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.

இன்னொரு விக்கெட்
இதேபோல் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் ரன் அவுட் ஆனார். அஸ்வின் வீசிய 55வது ஓவரில் டிம் பெயின் ரன் அவுட் ஆனார். ஆனால் இதற்கு நடுவர் ரன் அவுட் கொடுக்கவில்லை. மூன்றாவது நடுவரும் இதற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இது ரன் அவுட்தான் என்பது ரிப்ளேவின் போது உறுதியானது.

உறுதியானது
டிம் பெயின் கோட்டை தாண்டாமல், கோட்டின் மீது பேட்டை வைக்கும் போது ரிஷாப் பண்ட் அவரை ரன் அவுட் செய்தார். ஆனால் இதை சரியாக ஆய்வு செய்யாமல் மூன்றாவது நடுவர் விக்கெட் இல்லை என்று கூறினார். நடுவரின் இந்த தவறான முடிவை பார்த்து ரஹானே கோபம் அடைந்தார். இதனால் வேகமாக சென்று அவர் நடுவரிடம் சண்டை போட்டார்.

சண்டை
ஏன் ரன் அவுட் கொடுக்கவில்லை என்று கேட்டு ரஹானே சண்டை போட்டார். இன்னும் சில இந்திய வீரர்களும் கூட நடுவரிடம் கோபமாக கேள்வி எழுப்பினார்கள். இன்று களத்தில் நடுவர்கள் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications