மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த வகையில் எப்படியாவது ஒரு முறையாவது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து நாட்டுக்காக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பல நூறு வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
எட்டு ஆண்டுகளாக அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை என சஞ்சு சாம்சன் இன்றுவரை போராடி வருகிறார். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு தற்போது தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதிலும் ஒரு நாள், டி20 டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலுமே தற்போது முகேஷ் குமார் இடம்பெற்றிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தால் தமக்கு வந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக எப்போதோ முடிவு செய்த திருமணத்தையும் மாற்றி வைக்க முடியாது.
இதனால் திருமணநாள் அன்று மட்டும் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்ட முகேஷ் குமார் திருமணம் முடிந்த மறுநாளே இந்திய அணிக்கு விளையாடுவதற்காக ராய்ப்பூர் வந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். இந்த நிலையில் திருமணம் ஆன வீரர்களை பொதுவாக யாருமே திட்ட மாட்டார்கள்.அவர் எந்த தவறு செய்தாலும் கூட பெரிய அளவில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் தம்மை நோக்கி வந்த பந்தை பிடிப்பதற்காக முகேஷ் குமார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது மிகவும் கடினம் என்பதால் அந்த பந்து அவரை மிஸ் செய்தது. இதனால் அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார். ஆனால் இந்தக் கேட்சை பிடிக்கவே முடியாது என தெரிந்தும் பலரும் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் பவுலர் தீபக் சாகர் மட்டும் கோபமடைந்து அவரை கையை நோக்கி திட்டினார். தீபக்சாகரின் இந்த செயலை ரசிகர்கள் கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியில் சார் ஒரு எளிய கேட்சை விட்டதை அவர் மறந்து விட்டார் போலும். அதனால் தான் கடினமான கேட்சை விட்டதற்கு புது மாப்பிள்ளையை திட்டுகிறார் என்று தீபக்சாகரை ரசிகர்கள் பொளந்து வருகிறார்கள்.