Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணிக்கு அடுத்த அடி.. 19 வயது வீரரை இறக்கிய ஆஸ்திரேலிய அணி.. அதிரடி மாற்றம்!

பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடி வரும் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியில் முதல் மூன்று போட்டிகளில் துவக்க வீரராக இறங்கிய நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அவர் மூன்று போட்டிகளில் 72 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவருக்கு பதிலாக 19 வயது வீரர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவரது பெயர் சாம் கோன்ஸ்டாஸ். சில மாதங்களுக்கு முன்பு அவர் சவுத் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி அடுத்தடுத்த உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்து இருந்தார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

அதன் பின்பு இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. சாம் கோன்ஸ்டாஸ் ஏற்கனவே இதே இந்திய அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் சதம் அடித்து இருப்பதால் இந்திய அணிக்கு இது மேலும் அழுத்தத்தை அதிகரிப்பதாக உள்ளது.

இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியை மழையின் உதவியுடன் டிரா செய்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டியில் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சாம் கோன்ஸ்டாஸ்-ஐ அணியில் சேர்த்து இருக்கிறது. அவரை பிளேயிங் லெவனில் சேர்த்து துவக்க வீரராக களமிறக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளது.

அதே போல, மூன்றாவது போட்டியில் காயத்தால் வெளியேறிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்-க்கு பதிலாக ஜை ரிச்சர்ட்ஸன் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் ஏற்கனவே இந்த தொடரில் ஒரு போட்டியில் அணியில் இடம் பெற்று இருந்தார்.

ஸ்காட் போலான்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடினார். அந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஸ்காட் போலான்ட் அந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

எனவே, ஸ்காட் போலான்ட் மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று நான்காவது போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அணிக்கு மேலும் சவால் அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸீன் அபோட், ஸ்காட் போலான்ட், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஜை ச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

Story first published: Friday, December 20, 2024, 13:13 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+