என்ன தெரிகிறது அங்கு? கோலியிடம் அடிக்கடி சென்று ஆஸி, வீரர்கள் செய்த விஷயம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் விராட் கோலியை விக்கெட் எடுப்பதற்காக அவரிடமே ஆஸ்திரேலிய வீரர்கள் ஐடியா கேட்டு வந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 35 ரன்களை குவித்து அவுட்டானார்.

இந்திய அணி இன்னிங்ஸ்
மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்று விளையாடிய சுப்மன் கில் 128 ரன்களையும் சேர்த்து வெளியேறினார். இதனால் இந்திய அணியை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பையும் விராட் கோலி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 128 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களை சேர்த்துள்ளார். ஆட்டமிழக்காமல் அவர் சேர்த்த ரன்களால் இந்திய அணி 289 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என வலுவான நிலையில் உள்ளது.

சதத்திற்கான காத்திருப்பு
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தரமான கம்பேக் கொடுத்து சதங்களை குவித்து வரும் விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்து வருகிறார். முதல் டெஸ்டின் போது சிறப்பாக ஆடிய போது அம்பயரின் தவறான முடிவால் அவுட்டானார். எனவே இன்றைய போட்டியில் எப்படியும் சதத்தை பூர்த்தி செய்துவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர். அதற்கேற்றார் போலவே பிட்ச்-ம் பேட்டிங்கிற்கு உதவி வருகிறது.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் தான் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. போட்டி நடந்துக்கொண்டிருந்த போது, நேர கிடைக்கும் போதெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியிடம் சென்று பேசிக்கொண்டே இருந்தனர். அதுவும் மார்னஸ் லபுசாக்னே, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடிக்கடி கோலியிடம் சென்று அவரது பேட் குறித்து விசாரித்து வந்தனர். அதன் மூலமாகவாவது கோலியை கட்டுப்படுத்த முடியும் என்ற மறைமுக காரணத்திற்காக கேட்டனர்.

பேட்டில் என்ன இருக்கு?
ஒவ்வொரு நாட்டின் களத்திற்கு ஏற்ப விராட் கோலி பேட்டை மாற்றுபவர். ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற களம் என்றால் பேட்டிங் மிடில் பகுதியில் தான் அதிகம் படும். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற களம் என்றால் பேட்டின் எட்ஜ்களில் படும். எனவே அந்த இடங்களில் நன்கு அடர்த்தியான மரத்தை கொடுத்து, அதிக பவர் கொடுப்பார்கள். அந்தவகையில் தான் கோலியின் பேட் குறித்து தெரிந்துக்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications