For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியல்.. கோலியை மிஞ்சிய ரஹானே

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த மெல்போர்ன் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. இந்த நிலையில், புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்களா? என்ற கேள்வி இந்திய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இதற்கு முந்தைய காலகட்டங்களில் மெல்போர்ன் மைதானத்தில் பல இந்தியர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். கடந்த இரண்டு மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பதே இதற்கு சான்று ஆகும். மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்,அஜின்க்யா ரஹானே மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து உள்ளனர்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் சச்சின் டெண்டுல்கர் 449 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் இந்த மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்து இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் அஜின்க்யா ரஹானே இருக்கிறார். அவர் மூன்று போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 369 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் மெல்போர்ன் மைதானத்தில் இரண்டு சதங்களை அடித்து இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அவரும் மூன்று போட்டிகளில் விளையாடி ஐந்து இன்னிங்ஸ்களில் 316 ரன்கள் எடுத்து இருக்கிறார். மெல்போர்ன் மைதானத்தில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களை அடித்து இருக்கிறார். அதே சமயம் இரண்டு முறை மெல்போர்ன் மைதானத்தில் டக் அவுட்டும் ஆகி இருக்கிறார் கோலி.

நான்காவது இடத்தில் வீரேந்தர் சேவாக் இடம் பிடித்துள்ளார். அவர் மெல்போர்ன் மைதானத்தில் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடி நான்கு இன்னிங்ஸ்களில் 280 ரன்கள் சேர்த்து இருக்கிறார். ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இருக்கிறார்.

ஐந்தாவது இடத்தில் டெஸ்ட் போட்டி ஜாம்பவான் ராகுல் டிராவிட் இடம் பெற்று இருக்கிறார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 263 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவர் இரண்டு அரை சதம் மட்டுமே அடித்து இருக்கிறார். மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் குறித்து இந்திய வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் குண்டப்பா விஸ்வநாத் (257 ரன்கள்), ஏழாவது இடத்தில் திலீப் வெங்க்சர்க்கார் (249 ரன்கள்), எட்டாவது இடத்தில் சவுரவ் கங்குலி (241 ரன்கள்), ஒன்பதாவது இடத்தில் வினு மன்கட் (240 ரன்கள்), பத்தாவது இடத்தில் சுனில் கவாஸ்கர் (212 ரன்கள்) இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Monday, December 23, 2024, 10:00 [IST]
Other articles published on Dec 23, 2024
English summary
IND vs AUS 4th Test: Most runs by Indian batsmen in MCG - Sachin Tendulkar leads the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+