Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு.. யாருக்கு பதில் தெரியுமா? இந்திய அணிக்கு டாசில் பாதகம்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனை ஒரு மாற்றம் செய்திருக்கிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். ஆஸ்திரேலியா வென்றால் தொடர் சமனாகிவிடும். இதனால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பு இடையே நடைபெறுகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச போவதாக முடிவு எடுத்திருக்கிறது.

Ind vs Aus 5th T20I

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், நாங்கள் முதலில் பந்து வீச போகின்றோம். இந்த ஆடுகளம் எப்போதுமே நன்றாக இருக்கும். இந்த மைதானத்தில் விளையாடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த போட்டியில் வென்றால் தொடரை நாங்கள் சமன் செய்து விடுவோம்.

இதனால் விளையாடுவதற்கு நிறையவே இருக்கின்றது. நாங்கள் இரு அணிகளும் இந்த தொடரில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றோம். இந்தியாவும் நன்றாக பங்கு வீசி வருகிறார்கள். ஆனால் இன்று ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே நிறைய மாற்றங்களை சந்தித்து இருப்பதால் இன்றைய போட்டியில் நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் அணியில் செய்யவில்லை என்று மிட்செல் மார்ஷ் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், போட்டியில் வெல்லும் வரை எனக்கு டாசில் தோற்பது குறித்து எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட நினைக்கின்றோம். பேட்டிங் வரிசையில் மாற்றுவதில் என்பது எந்த சிக்கலும் இல்லை. அணியின் குறிக்கோள் தான் முக்கியம்.

கடந்த போட்டியில் 175 ரன்கள் தாண்டினாலே போதும் என்று நினைத்தோம். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் பேட்டிங் செய்தோம். கடந்த போட்டியில் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். அதையே இந்த போட்டியிலும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். இரு தரப்பு தொடர்களை வெல்வது என்பது எப்போதுமே மகிழ்ச்சியை தரும்.

அதே சமயம் உலக கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டும். டி 20 கிரிக்கெட்டை பொருத்தவரை தொடக்க வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் எப்போதுமே நிலையானது கிடையாது. பேட்டிங் வரிசையில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் திலக் வர்மாவுக்கு ஓய்வலித்து விட்டு ரிங்கு சிங்கை அணியில் சேர்த்து இருக்கிறோம் என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கில் தொடக்க வீரராக தொடர்கிறார்.

Story first published: Saturday, November 8, 2025, 13:33 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+