Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: டி20 உலககோப்பைக்கான அணியை தேர்வு செய்து தலைவலியா இருக்கு.. கேப்டன் சூர்யகுமார் கருத்து

மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறிக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், வானிலை என்பது எங்கள் கையில் கிடையாது. எனினும் எங்கள் அணியின் வீரர்களுக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இரண்டாவது போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவிய பிறகு அவர்கள் நல்ல முறையில் செயல்பட்டு அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றார்கள்.

Ind vs Aus 5th T20I

வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் அனைவருமே தங்களுடைய பணியை சிறப்பாக செய்தார்கள். பும்ரா, ஆர்ஸ்தீப் மற்றும் ஸ்பின்னர்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்கள். வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் அணியின் பலத்தை கூட்டுகிறார்கள்.

இதன் மூலம் எங்களுடைய திட்டத்தை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்திக் கொள்ளலாம் என்ற வசதி இருக்கின்றது. ஆனால் எந்த வீரர்களை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்வது என்பது இன்னும் தலைவலியாக தான் இருக்கிறது. ஆனால் அது நல்லதை கொடுக்கும். தலைவலி உலகக் கோப்பைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று தொடர்கள் இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அது நிச்சயம் ஒரு நல்ல பயிற்சி களமாக எங்களுக்கு அமையும். மகளிர் உலகக்கோப்பை அணி எங்களின் நாட்டுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்கள். அப்போது கிடைத்த ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கும் ஒரு புது உந்துதலை கொடுத்திருக்கின்றது. சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கும் நல்ல ஆதரவு இருக்கும். அந்த தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால் அதற்கு இடையில் இரண்டு முக்கிய தொடர்கள் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது எப்போதுமே ஒரு அழுத்தத்தை கொடுக்கும். எனினும் அந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம். உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என பலம் வாய்ந்த அணிகளை எதிர் கொள்கின்றோம். இது நிச்சயம் வீரர்களுக்கு நல்ல பயிற்சி மட்டும் கொடுக்காமல் நல்ல நம்பிக்கையும் தரும் என்று சூர்யகுமார் கூறினார்.

Story first published: Saturday, November 8, 2025, 22:29 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+