Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ப வைச்சு ஏமாத்திட்டீங்களே! ஸ்டீவ் ஸ்மித் செய்த காரியம்.. கோபத்தில் கொந்தளித்த ஆஸி. கேப்டன்!

Recommended Video

Ind vs Aus 3rd ODI | Aaron Finch fumes as Steve Smith | ஸ்டீவ் ஸ்மித்தால் அவுட் ஆன பின்ச்

பெங்களூரு : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது ஸ்டீவ் ஸ்மித் செய்த தவறால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் ரன் அவுட் ஆனார்.

கடும் கோபம்

கடும் கோபம்

ரன் அவுட் ஆன பின் கடும் கோபத்தில் கொந்தளித்தார் ஆரோன் பின்ச். அவர் தான் இப்படி மோசமாக ரன் அவுட் ஆவோம் என எதிர்பார்க்காத அவர் திட்டிக் கொண்டே பெவிலியன் திரும்பினார்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 1 - 1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தான் தொடரைக் கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.

டாஸ் முடிவு சாதகம்

டாஸ் முடிவு சாதகம்

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானம் சேஸிங் செய்ய கடினமான ஆடுகளம் என்பதால் இந்த முடிவு ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.

டேவிட் வார்னர் அவுட்

டேவிட் வார்னர் அவுட்

துவக்க வீரர் டேவிட் வார்னர் 3 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஆரோன் பின்ச் - ஸ்டீவ் ஸ்மித் இணைந்து பேட்டிங் செய்தனர். இருவரும் ரன் குவிக்க திணறி வந்தனர்.

அந்த பந்து

அந்த பந்து

அப்போது 9வது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித், பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் அடித்தார். அடித்து விட்டு ரன் ஓட முடிவு செய்து சில அடிகள் எடுத்து வைத்தார்.

ரன் ஓடுவதில் குழப்பம்

ரன் ஓடுவதில் குழப்பம்

அதற்குள் பந்தை ஜடேஜா பிடித்து விட்டார். அதைக் கண்ட அவர் அப்படியே திரும்பி தன் கிரீஸுக்குள் பாய்ந்தார். அதே சமயம், மறுபுறம் இருந்து கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் ஓடி வந்ததை பார்த்து, மறுமுனைக்கு ஓடி வந்து விட்டார்.

தவறவிட்ட ஜடேஜா

தவறவிட்ட ஜடேஜா

ஒரே நேரத்தில் இரண்டு பேட்ஸ்மேன்களும் ஸ்ட்ரைக்கர் திசையில் நின்றனர். ஜடேஜா வீசிய பந்து ஸ்டம்புகளை தவறவிட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் கைக்கு சென்றது. அவர் பந்தை பந்துவீச்சாளர் திசையில் இருந்த ஷமிக்கு அனுப்பினார்.

ரன் அவுட் ஆனார்

ரன் அவுட் ஆனார்

ஆரோன் பின்ச் மீண்டும் ஓடி வந்தாலும், அவர் அதிக தூர இடைவெளியில் தான் இருந்தார். ஷமி எளிதாக ரன் அவுட் செய்தார். ஸ்டீவ் ஸ்மித் செய்த குளறுபடியால் தான் ரன் அவுட் ஆனதை எண்ணி கடும் கோபத்தில் இருந்தார் பின்ச்.

அதிர்ஷ்டம் இருந்தது!

அதிர்ஷ்டம் இருந்தது!

பெவிலியன் திரும்பும் போது கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டே சென்றார். ஜடேஜா பந்தை எறிந்த போது ஸ்டம்புகளில் அடிக்கவில்லை. அந்த சூழ்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஒருவேளை பின்வாங்காமல் ஓடி இருந்தால், இரண்டு பேட்ஸ்மேன்களுமே அதிர்ஷ்டத்தில் தப்பித்து இருக்க முடியும்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

ஆரோன் பின்ச் ஆட்டமிழந்தாலும் அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லாபுஷாக்னே பொறுப்பாக ஆடி ரன் குவித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் சேர்த்தனர்.

Story first published: Sunday, January 19, 2020, 16:15 [IST]
Other articles published on Jan 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+