Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: நம்பர் 1 வீரரை வெளியே உட்கார வச்சிருக்காங்க? முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் தாக்கு

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் முறை மோசமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் சாடி இருக்கிறார். மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சேர்க்கவில்லை.

மேலும் பேட்டிங் வரிசையில் ஹர்ஷித் ரானாவை சிவம் துபேக்கு முன்பே களமிறங்கியதும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், இதுபோன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் போது அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை.

Ind vs aus India vs australia Gautam Gambhir

அடுத்த டி20 போட்டியில் ஆர்ஸ்தீப் விளையாடவில்லையென்றால் அது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக தான் இருக்கும். டி20 கிரிக்கெட்டில் நான் ஒன்றே ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றேன். அதிகப்படியான பேட்டர்களை வைத்துக்கொண்டு விளையாடினால் அது சிலரின் பொறுப்புகளை குறைத்து விடும்.

இதன் காரணமாக பேட்டர்கள் ஆழ்மனதில் நாம் இன்று அடிக்கவில்லை என்றாலும் வேறு ஒரு வீரர் பார்த்துக் கொள்வார் என்று நினைத்து விடுவார்கள். ஆனால் குறைந்த அளவு பேட்டர்களை வைத்து விளையாடும் போது மற்ற வீரர்களுக்கு பொறுப்பு அதிகமாகும். டி20 உலக கோப்பை தொடரை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியா இந்த போட்டிகளை வீரர்களை அடிக்கடி மாற்றுகிறது என்று நினைக்கின்றேன்.

சரியான காம்பினேஷன் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் பிளே மாற்றுகிறார்கள். இரண்டாவது டி20 போட்டியை பார்த்தீர்கள் என்றால் பும்ரா வீசிய முதல் ஓவர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தலைவலியை கொடுத்தது. ஆனால் ஹர்ஷித் ராணா வீசியபோது ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர் கொண்டார்கள்.

டிராவிஸ் ஹெட் மற்றும் மார்ஷ் இணைந்து இந்தியாவுக்கு தண்டனை கொடுத்தார்கள். மேலும் தற்காத்துக் கொள்ள போதிய ரன்கள் இல்லாததால் இந்தியா தோல்வியை தழுவியது. இன்னும் ஒரு 20 ரன்கள் கூட அடித்து இருந்தால் கூட போட்டி மேலும் விறுவிறுப்பாக மாறி இருக்கும். அபிஷேக் ஷர்மா, பேட்டிங் செய்யும்போது அவரை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் கடினம் போல் மாறிவிடுகிறது. ஆனால் அபிஷேக் ஷர்மா அதிரடி காட்டிய போதும் மார்ஷ் சிறப்பான கேப்டன்சியை கையாண்டார் என்று ஆரோன் பிஞ்ச் பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, November 1, 2025, 14:38 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+