Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- கோலி, ரோகித் மீது கரப்பான் பூச்சி போல் வந்து விமர்சித்தார்கள்.. டிவில்லியர்ஸ் பதிலடி

மும்பை: இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சேர்க்கப்பட்ட போது பலரும் பலவிதமான விமர்சனங்களை எழுப்பினர். இருவருக்கும் வயதாகிவிட்டது என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.

AB Devilliers

அதற்கு ஏற்ப விராட் கோலி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆனார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். ரோகித் சர்மா 121 ரன்களும், கோலி 74 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ரோஹித், கோலியை விமர்சித்தவர்கள் பற்றி எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒருவேளை நான் அவர்களை கரப்பான் பூச்சி என்று சொல்லலாமா என நினைக்கின்றேன். கரப்பான் பூச்சி எப்படி பொந்தில் இருந்து வெளியே வருமோ, அதே போல் இருவரும் சரியாக விளையாடவில்லை என்று கூறி பலரும் எங்கிருந்தோ வந்து விமர்சித்தார்கள். உங்கள் நாட்டுக்காக உடல் பொருள் ஆவி என அனைத்தையும் வழங்கிய வீரர்கள் மீது ஏன் இப்படி எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

கிரிக்கெட் போன்ற ஒரு சிறந்த விளையாட்டை கொண்டாடுவதற்கு சரியான நேரம். கோலி, ரோஹித்தின் இந்த இறுதி கட்ட நாட்கள் தான் கடந்த சில மாதங்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பல விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

இருவரையும் கீழே தள்ளிவிட வேண்டும் என பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்தார்கள்.
இதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அவர்கள் வெறும் கொஞ்சம் நபர்கள் தான் என்று கூறுவேன். ஏனென்றால் பெரும்பான்மையான மக்கள் இந்த இருவரையும் கொண்டாடினார்கள் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 27, 2025, 23:23 [IST]
Other articles published on Oct 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+