Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும்.. அபிஷேக் நாயர் கணிப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்து விளையாட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு ஒன்று என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Abhishek Nayar

அடிலெய்ட் ஆடுகளம் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ஆன அபிஷேக் நாயர், இந்திய அணி எவ்வாறு பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என நான் கணிக்கின்றேன்.

என்னுடைய கணிப்பின்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். இந்திய அணியில் உள்ள ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கப்பட்டு அவருக்கு பதில் குல்திப் யாதவ் பயன்படுத்தப்படலாம். இதுதான் என்னுடைய கணிப்பாக இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் கில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிக அளவு ஓவர்களை எதிர்கொண்டு போட்டியின் கடைசி வரை இருப்பார் என நினைக்கின்றேன்.

அடிலெய்ட் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் பந்து ஸ்விங் ஆனாலும் நாம் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்து விட்டு தான் விளையாட வேண்டும். அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவருமே விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அர்ஸ்தீப் சிங் என்ற ஒரே வேகப்பந்துவீச்சாளர் மட்டும்தான் விக்கெட்டை எடுத்தார்.

இந்திய அணியின் பலம் என்ன என்பது குறித்து கில்லுக்கு நன்றாகவே தெரியும். குல்திப் யாதவ் எவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றும் அனைவருக்கும் தெரியும். அடிலெய்ட் ஆடுகளம் நிச்சயம் அவருக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்திய அணி பந்து வீசும் போது 15 ஆவது 35 வது வரை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் நமது அணியில் வருண் சக்கரவர்த்தி இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து விளையாட வேண்டும். இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றிகரமான ஜோடியாக திகழ்ந்தனர் என்று அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, October 21, 2025, 23:43 [IST]
Other articles published on Oct 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+