Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா.. கதையை முடித்த சிஎஸ்கே வீரர்.. கம்பீரின் திட்டத்தால் சரிவு

கான்பெரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடுகின்ற நிலையில், முதல் விக்கெட்டை 35 ரன்களுக்கு இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி கான்பெராவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவில் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இரண்டாவதாக பந்துவீசும் போது இலக்கை தற்காத்துக் கொள்ள முடியும். எனினும் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க சில யுக்திகளை கையாள வேண்டும்.

Abhishek sharma

ஆனால் இந்திய அணி கம்பீர் வந்ததுக்கு பிறகு முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடி வருகிறது. இதில் பல நேரம் இந்தியாவுக்கு சாதகமாக முடிவுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணியை அவர்கள் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் போது கொஞ்சம் நிதானம் தேவை.

இந்த நிலையில் ஐசிசி t20 தர வரிசையில் நம்பர் ஒன் பேட்டராக இருக்கும் அபிஷேக்சர்மா வழக்கம் போல் முதல் பந்தல் இருந்து அதிரடி காட்ட முற்பட்டார். ஆனால் பந்து வீசுவது ஆஸ்திரேலிய வீரர்கள் என்பதால் அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த அவர்களும் தங்களது பந்து வீசும் திட்டத்தில் சில மாற்றங்களை செய்தனர்.

குறிப்பாக அபிஷேக் ஷர்மா இறங்கி வந்தால் பந்தை கொஞ்சம் ஷார்ட் பாலாக வீசுவது ஆப்சைடுக்கு வெளியே வீசுவது என தங்களது பந்துவீச்சு முறையில் மாற்றத்தை மேற்கொண்டனர். எனினும் அதையும் மீறி அபிஷேக் ஷர்மா நான்கு பவுண்டர்களை அடித்து விளையாடினார். இதேபோன்று கில்லும் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்திய அணி ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்தபோது, அதற்கு ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது. சிஎஸ்கே வீரர் நாதன் ஏலிஸ் வீசிய ஓவரை அடிக்க முற்பட்ட அபிஷேக் ஷர்மா நேராக டீம் டேவிட் இடம் அடித்து கேட்ச் ஆனார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை விமர்சித்த கிரிக்கெட் வல்லுனர்கள், சில பந்துகளை நின்ற இடத்தில் இருந்து விளையாட முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால் அபிஷேக் ஷர்மா அனைத்து பந்தையும் இறங்கி வந்து அடிக்க முற்படுகிறார். இது தவறாக போய் முடியலாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் அபிஷேக்சர்மாவுக்கு இந்த யுத்தி தான் கை கொடுக்கிறது என்பதால் அதை அவர் மாற்ற மாட்டார் என்றும் கூறியுள்ளனர். இந்திய அணி 5 ஓவர் முடிவில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக தடைப்பட்டு இருக்கிறது.

Story first published: Wednesday, October 29, 2025, 14:25 [IST]
Other articles published on Oct 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+