Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: என்னுடைய வாழ்நாள் கனவு ஒன்று தான்.. அதற்கு தயாராகி வருகிறேன்.. தொடர்நாயகன் விருது வென்ற அபிஷேக்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா 163 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தொடருக்காக நான் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்தேன். ஆஸ்திரேலியாவுக்கு நாம் டி20 போட்டிகளில் விளையாட செல்கின்றோம் என்று தெரிந்த உடனே நான் இதற்கு தயாராகினேன்.

Abhishek Sharma

நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கின்றேன், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே இந்த ஆடுகளங்களில் நாம் நல்ல இலக்குகளை எடுக்கலாம் என்று நினைத்தேன். ஹேசல்வுட் போன்ற பவுலர்கள் பந்து வீசினால் அது எந்த அணிக்கும் பெரும் பலமாக மாறிவிடும்.

நான் எப்போதும் சொல்வது தான். பேட்டர்களுக்கும், பவுலர்களுக்குமான யுத்தம் எப்போதுமே பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். ஹேசல்வுட் உலகத்தரம் வாய்ந்த பவுலர். நீங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் உலக தரம் வாய்ந்த பவுலரை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்.

நான் பயிற்சி செய்யும் போது அது போன்ற தரம் வாய்ந்த பவுலர்களை தான் தினமும் எதிர்கொள்கின்றேன். இதனால் தான் என் அணிக்காக என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது. இதற்கு என்னுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பொறுப்பை அவர்கள் தான் எனக்கு வழங்கினார்கள்.

களத்திற்கு சென்று என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட எனக்கு முழு சுதந்திரம் அளித்தார்கள். ஒரு பேட்ஸ்மேனாக 20 ரன்களில் 30 ரன்கள் ஆட்டம் இழக்கும் போது அது சுலபமாக இருக்காது. ஏனென்றால் நம்மால் இன்னும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்று தெரியும். எனினும் என்னுடைய பணி என்ன என்று தெளிவாக அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

பேட்டிங்கில் அணிக்கான உத்வேகத்தை நான் தொடக்க வீரராக வழங்க வேண்டும். எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் இல்லாத நேரத்தில் பயிற்சி அதிகமாக செய்வேன். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்திருக்கின்றது. சிறு வயதிலிருந்து உலக கோப்பையை வென்று அணிக்காக வெற்றிகளை தேடி தர வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு இந்த தொடருக்காக நான் சரியான முறையில் தயாராக வேண்டும் என்று அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.

Story first published: Saturday, November 8, 2025, 23:11 [IST]
Other articles published on Nov 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+