Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியை வீழ்த்தினாலே குஷி தான்.. அவங்க ஊரிலேயே நெருக்கடி கொடுத்தோம்.. அடம் ஜாம்பா கருத்து

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடரை ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்பிய ஆடம் ஜாம்பா 10 ஓவர்கள் வீசி 60 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Adam Zampa

இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆடம் சாம்பா, இந்திய அணியை வீழ்த்துவது என்பது எப்போதுமே குஷியாக தான் இருக்கும். இந்திய அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய ஆட்டங்கள் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தையே விளையாடி இருக்கின்றோம்.

அதுவும் ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றோம். இந்திய மண்ணில் நாங்கள் விளையாடும் போது கூட அவர்களுக்கு கடும் நெருக்கடியை நாங்கள் கொடுத்திருக்கும். இதே போல் அவர்களும் இங்கு விளையாடினால் சில போட்டிகளில் எங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் இரு அணிகளும் எந்த கள சூழலுக்கும் தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொண்டு விளையாடுவார்கள் என்பது தெரிகிறது.

இந்தியா தற்போது உலகின் சிறந்த அணியாக இருக்கின்றது. இதுபோன்ற சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது அது எங்களுக்கு நாங்களே வைத்துக் கொள்ளும் ஒரு பரீட்சை போல் இருக்கின்றது. எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் ஆதிக்கம் செலுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோன்று சேவியர் நாதன் டெல்லி போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். இதன் காரணமாக நடு ஓவர்களில் என்னுடைய பணி சுலபமாக மாறிவிடுகிறது. எங்கள் அணியின் கேப்டன் எப்போதுமே ரிலாக்ஸ் ஆக எந்த ஊர் டென்ஷனும் இன்றி இருக்கின்றார். அவர் எப்போதும் எமோஷன் ஆக ஆவது கிடையாது. இது எங்களுடைய காட்சி. எங்கள் காட்சியை நாங்களே நடத்துவோம் என்று ஆடம் சாம்பா கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 23, 2025, 20:20 [IST]
Other articles published on Oct 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+