Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை மட்டும் செஞ்சா.. இன்னும் 2 மேட்ச்.. ரஹானேவுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்!

சிட்னி : இந்திய அணியை இரண்டாவது டெஸ்டில் மிக சிறப்பாக வழி நடத்தினார் கேப்டன் அஜின்க்யா ரஹானே.

கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், துணை கேப்டன் ஆன அவர் அணியை வழிநடத்தி வருகிறார்.

அவரது கேப்டன்சி குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், மறக்க முடியாத பெயர் ஒன்றை கேப்டனாக அவர் பெற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 1 என சமநிலையில் உள்ளது. அடுத்த ஒரு போட்டிகளையும் வென்றால் இந்தியா தொடரை கைப்பற்றுவதோடு மற்றொரு உச்சத்தையும் எட்டும்.

தரவரிசை

தரவரிசை

ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி தற்போது 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாகம், இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும் 116 புள்ளிகளுடன் உள்ளன.

இப்படி நடந்தால்..

இப்படி நடந்தால்..

இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்றாலோ, 3 - 1 என வென்றாலோ தரவரிசையில் முதல் இடத்தை பெறலாம். ஒருவேளை 2 - 2 என இந்தியா தொடரை சமன் செய்தால், நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைய வேண்டும். அப்போது இந்தியா முதல் இடத்தை பெறும்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

ரஹானே தலைமையில் இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பெறுவதோடு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரையும் வென்று பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கலாம். இது கேப்டனாக ரஹானேவுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தரும்.

Story first published: Thursday, December 31, 2020, 18:33 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+