Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறான முடிவை எடுத்து விட்டார்.. எதிர்பார்க்காத கோலி.. டெஸ்ட் அணி கேப்டன்சிக்கு குறி வைக்கும் சீனியர்

சிட்னி : இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான இடத்தை பிடிக்க இருக்கிறார் அஜின்க்யா ரஹானே.

ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும் நிலையில், டெஸ்ட் அணிக்கு ரஹானேவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும் ஆச்சரியம் இல்லை.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி முடிந்த உடன் இந்தியா திரும்ப உள்ளார் கேப்டன் விராட் கோலி. அதன் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளுக்கு அஜின்க்யா ரஹானே கேப்டனாக செயல்பட உள்ளார்.

ரஹானே கேப்டன்சி

ரஹானே கேப்டன்சி

அஜின்க்யா ரஹானே இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தரம்சாலா வில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்து இருந்தார்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

அவர் ஆக்ரோஷமாக செயல்பட மாட்டார் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், பயிற்சிப் போட்டிகளில் அவர் பந்துவீச்சில் அதிரடியாக சில முடிவுகளை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சாப்பல் அவர் ஆக்ரோஷமாக செயல்படுவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

தொடரை வென்றால்..

தொடரை வென்றால்..

அஜின்க்யா ரஹானே நிச்சயம் கோலி இல்லாத மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று காட்ட அவர் முயல்வார். டெஸ்ட் தொடரை ரஹானே வென்று காட்டினால் நிச்சயம் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழும். அதை அவரும் உணர்ந்தே இருப்பார்.

அழுத்தம் ஏற்படும்

அழுத்தம் ஏற்படும்

விராட் கோலிக்கு ரஹானே அழுத்தம் கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் கோலி கேப்டனாக செயல்பட உள்ள முதல் டெஸ்டில் தோல்வி அடைந்து, ரஹானே கேப்டன்சியில் இந்தியா வென்றால் நிலைமை முற்றிலும் மாறும்.

தவறான முடிவா?

தவறான முடிவா?

விராட் கோலி பிரசவ சமயத்தில் தன் மனைவி அருகே இருக்க வேண்டும் என இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டாலும், இது அவரது கேரியரை மாற்றும் தவறான முடிவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Saturday, December 12, 2020, 13:31 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+