Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் விவகாரம்.. அஜித் அகார்கருக்கு மோசமான முடிவு காத்திருக்கு.. முன்னாள் வீரர் கருத்து

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027 உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா?

இருவரையும் அஜித் அகார்கர் நீக்கிவிடுவாரா என்ற பல விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் ஹார்மிசன், கோலி, ரோஹித் சர்மாவுடன் போட்டி போட்டால் அஜித் அகார்கர் தான் தோல்வியை தழுவுவார் என்று தெரிவித்துள்ளார்.

Ind vs Aus

இது குறித்து பேசிய அவர் அஜித் அகார்க்கருக்கு மோசமான முடிவு காத்திருக்கிறது. இந்த விவாகரத்தில் யாராவது வெற்றி பெறப் போகிறார்கள் என்றால் அது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவாகத்தான் இருக்குமே, தவிர அஜித் அகார்கர் கிடையாது. ஆனால் தற்போது அஜித் அகார்கர் சொல்வதெல்லாம் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கோபப்படுத்தி மீண்டும் கிரிக்கெட் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இருந்தால் அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

ஆனால் நீங்கள் செய்யும் விஷயத்தை செய்து விடுங்கள். அதற்கான விளைவுகள் பின்னால் நிச்சயம் வரும். விராட் கோலியை பொருத்தவரை அவருக்கு நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக திறன் இருக்கின்றது. அவர் அதிக அளவு ரன்களையும் குவித்து இருக்கின்றார். ரோகித் சர்மா பொறுத்தவரை அவர் கொஞ்சம் வயது மூப்பாக இருக்கின்றார்.

விராட் கோலி போல் ரோகித் சர்மாவால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை நீங்கள் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இல்லாமல் 50 ஓவர்களில் 350 ரன்களை ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துக்கு எதிராக சேஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இது போன்ற சேஸிங்கில் சராசரி 90 வைத்திருக்கும் ஒரு வீரர் இல்லாமல் விளையாட வேண்டும்.

அது எப்படியும் உங்களுக்கு தோல்வியையே தரும். அகார்கர் நான் வெறும் மோதலில் மட்டும் தான் ஈடுபட போகிறேன் என்று நினைத்தால், அவருக்கு நிச்சயம். இந்த சண்டை கிடைக்கும் ஆனால் நிச்சயம் அவரால் வெற்றி பெற முடியாது. விராட் கோலி நினைத்தால் பிரைவேட் ஜெட் மூலம் லண்டனில் இருந்து எங்கு வேண்டுமானாலும் வந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, October 8, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+