Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ஒரு சோம்பேறித்தனம்? இந்திய வீரர் செய்த காரியம்.. ஆஸி. டீமை விளாசிய ஜாம்பவான்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியன்ஸ் அணி ஆடியது.

இதில் இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா பேட்டிங் செய்த போது ஆஸ்திரேலியா ஏ அணியின் செயல்பாடு படுமோசமாக இருந்ததாக விளாசி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர்.

பயிற்சி டெஸ்ட்

பயிற்சி டெஸ்ட்

இந்தியன்ஸ் அணியும், ஆஸ்திரேலியா ஏ அணியும் மோதிய பகல் - இரவு பயிற்சி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியன்ஸ் அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விமர்சனம்

விமர்சனம்

அடுத்ததாக ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்களுக்கு சுருண்டது. அப்போதே அந்த அணி மீது விமர்சனம் எழுந்தது. அடுத்து இந்தியன்ஸ் அணி பேட்டிங் ஆடியது. அப்போது மயங்க் அகர்வால் 61, ஷுப்மன் கில் 65, ரஹானே 38 ரன்கள் குவித்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஹனுமா விஹாரி - ரிஷப் பண்ட் கூட்டணி அமைத்து ரன்கள் குவித்தனர். இரண்டாம் நாளின் கடைசி நேரத்தில் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார். அப்போது ஆஸ்திரேலியா ஏ அணியின் செயல்பாடு ஏனோ தானோ என இருந்தது.

ரிஷப் பண்ட் சதம்

ரிஷப் பண்ட் சதம்

ரிஷப் பண்ட் அந்த நாளுடன் ரஹானே டிக்ளர் செய்வார் என்பதால் கடைசி ஓவருக்குள் சதம் அடித்து தன் பார்மை நிரூபிக்க வேண்டும் என முடிவு செய்து கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தார். ரிஷப் பண்ட்டை ஒரே ஓவரில் சதம் அடிக்க விட்டு வேடிக்கை பார்த்தது ஆஸ்திரேலியா ஏ அணி.

கடுமையாக விமர்சனம்

கடுமையாக விமர்சனம்

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய ஏ அணியில் ஆடிய இளம் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கேப்டன் முதல் அனைவரையும் விளாசி இருக்கிறார்.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

ஆலன் பார்டர் கூறுகையில், "கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மோசமான, சோம்பேறித்தனமாக செயல்பாட்டை நான் பார்த்ததேன். இது ஆஸ்திரேலிய ஏ அணி. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்காக ஆடுகிறார்கள். தங்கள் வாய்ப்புக்காக அவர்கள் ஆடுகிறார்கள்." என்றார்.

படுமோசமாக இருந்தது

படுமோசமாக இருந்தது

"ஆனால், அந்த பீல்டிங் செயல்பாடு, பந்துவீச்சு செயல்பாடு, கேப்டன்சி செயல்பாடு எல்லாமே படுமோசமாக இருந்தது. ஒரு விதத்திலும் அது நன்றாக இல்லை. அந்த வீரர்களில் யாராவது என்னிடம் என்ன நடந்தது எனக் கூறினால், அதை திருத்திக் கொண்டால் நான் மகிழ்வேன்" என்றார் பார்டர்.

பயிற்சியாளராக இருந்தால்..

பயிற்சியாளராக இருந்தால்..

"அந்த சமயத்தில் நான் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தால், சில அதிரடி அறிவுரைகளை கூறி அவர்கள் ஆட்டத்தை மாற்ற முயற்சி செய்து இருப்பேன். அப்படி செய்யவில்லை என்றால் அந்தப் போட்டியில் நாம் இல்லவே இல்லை என்று அர்த்தம்" என்றார்.

உங்களுக்கு இது தேவைதான்

உங்களுக்கு இது தேவைதான்

மேலும், "அப்படி இல்லை என்றால், அண்டர் 16 மாஸ்மேன் கிரிக்கெட் கிளப்பை அழைத்து வந்து, அந்த வேலையை முடித்து இருப்பேன். இது நன்றாக இல்லை வீரர்களே.. எனக்கு பயமாக உள்ளது. அந்த ஆட்டத்துக்கு பின் உங்களுக்கு இது தேவைதான்" என விளாசினார் ஆலன் பார்டர்.

Story first published: Sunday, December 13, 2020, 19:14 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+