Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெஞ்சில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்.. நியாயமாக செயல்படுங்க கம்பீர்.. அஸ்வின் வைத்த வேண்டுகோள்!

மும்பை: இந்திய டி20 அணியில் பும்ரா ஆடினால் வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் 2வதாக இருக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ஹர்சித் ராணா ஆடுகிறார், ஆடவில்லை என்பதை கடந்து, அர்ஷ்தீப் சிங்கின் இடத்தை அவருக்கு கொடுப்பதே நியாயம் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக 125 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

IND vs AUS

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய 3 பவுலர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய டி20 அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் விளையாடாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதில் அஸ்வின் பேசுகையில், இந்திய அணிக்காக பும்ரா விளையாடும் போது வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் 2வதாக இடம்பெற வேண்டும். ஆனால் எதற்காக அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்பது இப்போது வரை புரியவில்லை. ஹர்சித் ராணாவுக்கு பேட்டிங் சிறந்த நாளாக அமைந்தது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இந்த விவாதம் ஹர்சித் ராணா பற்றியது அல்ல. இது அர்ஷ்தீப் சிங் பற்றியதுதான். டி20 உலகக்கோப்பை தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னரும், அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக அணியில் இருந்தும் பெஞ்ச் செய்யப்பட்டு கொண்டே இருக்கிறார். அவர் தொடர்ந்து பெஞ்சில் இருப்பதால், பவுலிங் ரிதமை இழந்து வருகிறார்.

ஆசியக் கோப்பைத் தொடரிலேயே பார்த்தோம். எவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்தார் என்பதை.. அவர் சிறப்பாக கம்பேக் கொடுத்திருந்தாலும், கொஞ்சம் கஷ்டப்பட்டார். அர்ஷ்தீப் சிங்கிற்கு உரிய இடத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். நான் மற்றவர்களின் இடத்தை பற்றி பேசவில்லை. ஆனால் அர்ஷ்தீப் சிங்கின் இடத்தை அவரிடம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Story first published: Saturday, November 1, 2025, 16:05 [IST]
Other articles published on Nov 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+