Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: என்னையா டீம் விட்டு தூக்குனீங்க.. ஆட்டநாயகன் விருது வென்று அர்ஷ்தீப் சிங் பதிலடி

ஹாபர்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் கிடைக்கவில்லை. இதில் முதல் டி20 போட்டி மழையால் இரத்தான நிலையில், இரண்டாவது t20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் இல்லாததால் இந்தியா தோல்வியை தழுவியது.

குறிப்பாக ஹர்ஷித் ராணா அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் கம்பீர் கடும் விமர்சனங்களை சந்தித்தார். இதனை அடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய அர்ஸ்தீப் சிங் இன்று அணிக்கு திரும்பினார். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

Arshdeep Singh

4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருது அர்ஷ்தீப் சிங்கிற்கு கிடைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னுடைய இந்தப் பந்துவீச்சு முறையில் நான் கடுமையாக உழைத்து வருகின்றேன். என்னுடைய திறமை மீது நான் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.

பயிற்சியில் நான் என்ன திட்டங்களை வகுத்தேனோ அதனை களத்தில் நான் பிரதிபலிக்கின்றேன். வாய்ப்பு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நான் அணிக்காக பங்களிப்பதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை பேட்ஸ்மேன் நமது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் எப்போதுமே விக்கெட்டுகளை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதுவும் பும்ரா போன்ற ஒரு வீரர் மறுமுனையில் இருந்து பந்து வீசும் போது என்னுடைய ஓவரில் பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ரன்களை சேர்க்க முயற்சி செய்வார்கள்.

அது எனக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பாக அமைகிறது. என்னுடைய பந்துவீச்சை நான் மகிழ்ச்சியுடன் வீச விரும்புகிறேன். என்னுடைய திட்டம் எப்போதுமே சிம்பிள் ஆக தான் இருக்கும். நான் எந்த கட்டத்தில் பந்து வீசுகிறேனோ, அதையெல்லாம் நான் கண்டு கொள்வதே கிடையாது. என்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டும்தான் என்னுடைய முழு கவனம் இருக்கும். பயிற்சியில் என்ன செய்கின்றனோ அதை தான் களத்திலும் செய்வேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 2, 2025, 19:54 [IST]
Other articles published on Nov 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+