Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த நிலைமையில் தெரியுமா பேட்டிங் செய்தார்? அணியை காத்த அஸ்வின்.. அதிர வைத்த விஹாரி!

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்தது.

அந்தப் போட்டியில் அஸ்வின் அபாரமாக பேட்டிங் செய்து இந்தியா போட்டியை டிரா செய்ய உதவினார்.

அவருடன் ஹனுமா விஹாரியும் காயத்துடன் பேட்டிங் செய்து அணியை காப்பாற்றினார்.

அஸ்வின் நிலை

அஸ்வின் நிலை

அடுத்து நடந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2 - 1 என கைப்பற்றியது. இந்த நிலையில், ஹனுமா விஹாரி, அஸ்வின் பேட்டிங் செய்தது குறித்து ஒரு பேட்டியில் விவரித்து இருக்கிறார். அஸ்வின் குனியவோ, உட்காரவோ முடியாத நிலையில் பேட்டிங் செய்ததாக அவர் கூறினார்.

உட்கார முடியவில்லை

உட்கார முடியவில்லை

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா டிரா செய்ய போராடியது. அஸ்வின் அதற்கு முந்தைய நாள் முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். ஐந்தாம் நாள் அன்று கூட அவரால் டிரஸ்ஸிங் அறையில் உட்கார முடியவில்லை.

பவுன்சர்

பவுன்சர்

ஜடேஜாவும் காயத்தில் இருந்ததால் அஸ்வின் அவருக்கு முன்னதாக பேட்டிங் செய்ய வந்தார். அஸ்வினால் குனிய முடியாத நிலையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பவுன்சர் பந்துகளை நின்று கொண்டே சமாளித்தார்.

வலியுடன் பேட்டிங்

வலியுடன் பேட்டிங்

அது பற்றி பேட்டியில் கூறி இருக்கிறார் ஹனுமா விஹாரி, நான்கு மணி நேரம் அந்த வலியுடன் அவர் போராடி மன உறுதியுடன் பேட்டிங் செய்தார். மேலும், விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து என்னுடன் பேசி அந்த சூழ்நிலையில் எனக்கு உதவினார் என்றார்.

Story first published: Thursday, January 21, 2021, 20:23 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+