Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சத்தமே இல்லாமல்... முத்தையா முரளிதரன் ரெக்கார்டை உடைத்து.. மாபெரும் சாதனை படைத்த அஸ்வின்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பல்வேறு சாதனைகளைப் பற்றி பேசிய பலரும் முக்கிய சாதனை ஒன்றை கவனிக்க தவறி விட்டனர்.

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல் ஒன்றில் முத்தையா முரளிதரனை முந்தி வியக்க வைத்துள்ளார்

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் இடம்

முதல் இடம்

இந்தப் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 2 விக்கெட்களும் வீழ்த்தினார். இதே போட்டியில் அவர் அதிக இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 192 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். முன்னதாக முத்தையா முரளிதரன் 191 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரை முந்தி இருக்கிறார் அஸ்வின்.

அதிக சதவீதம்

அதிக சதவீதம்

மேலும், அஸ்வின் எடுத்த மொத்த விக்கெட்களில் 51.2 சதவீதம் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையிலும் அவரே முதல் இடத்தில் இருக்கிறார். அஸ்வின் 73 டெஸ்ட் போட்டிகளில் 375 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 30, 2020, 19:49 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+