Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"4.2 டிகிரி மாயம்".. அஸ்வின் கையிலெடுத்த ஸ்பெஷல் அஸ்திரம்.. ஆஸியின் அஸ்திவாரத்தை சரித்த தமிழக வீரர்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இதுவரை 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் தற்போது மிரட்டி வருகிறார்கள். மெல்போர்னில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் அதிரடி காட்டி வருகிறார்கள்.

இதுவரை நடந்து உள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டை இழந்துள்ளது. அஸ்வின் 3, சிராஜ் 2, பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

அஸ்வின்

அஸ்வின்

இந்த போட்டியில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். தொடக்கத்தில் இருந்தே அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். அஸ்வினின் பவுலிங் இன்று நினைத்ததை விட அதிகமாக திரும்பியது.

டெஸ்ட்

டெஸ்ட்

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்துகள் 3.1 -3.5 டிகிரி வரை திரும்பும். அதாவது பந்து பிட்ச் ஆன பின் 3.5 டிகிரி வரை அதிகமாக திரும்பி உள்ளது. ஒருநாள் போட்டிகளில் 4 டிகிரி வரை கூட அஸ்வின் திருப்பி இருக்கிறார். ஆனால் இன்று மிகவும் ஆச்சர்யமாக 4.2 டிகிரிக்கு பந்தை திரும்பினார்.

சிறப்பு

சிறப்பு

ஆம் மிகவும் சிறப்பாக, பந்தை ஒரே அடியாக அஸ்வின் திருப்பினார். இதற்காக அஸ்வின் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பயிற்சி எடுத்தார். பந்தை கூடுதலாக திருப்பும் வகையில் அஸ்வின் கூடுதல் பயிற்சி எடுத்தார். இந்த பயிற்சி இன்று அஸ்வினுக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.

அடுத்த விக்கெட்

அடுத்த விக்கெட்

விளைவு இன்று அடுத்தடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்தார்.ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் மேத்யூ வேட், அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேப்டன் டிம் பெயின் ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். இதில் மூன்றுமே கேட்ச் விக்கெட் ஆகும்.

எப்படி சுழன்றது

எப்படி சுழன்றது

மூன்றிலும் அஸ்வின் போட்ட பந்து 3.8 டிகிரிக்கு அதிகமாக சுழன்று இருந்தது. அஸ்வினின் இந்த அதிக ஸ்பின்தான் அவருக்கு கை கொடுத்தது. மொத்தமாக இன்று ஆஸ்திரேலிய அணியின் அஸ்திவாரமே அஸ்வினின் பவுலிங்கில் சுருண்டு உள்ளது.

Story first published: Saturday, December 26, 2020, 11:38 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+