Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப சொல்லுங்க சார்.. கோலிக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்த அஸ்வின்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய மூத்த பவுலர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில்.. இரண்டாவது டெஸ்டில் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய மூத்த பவுலர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தொடக்கத்தில் இருந்து அஸ்வின் களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். எப்போது அஸ்வின் பவுலிங் ஸ்பின் ஆவதை விட இன்று கூடுதலாக ஸ்பின் ஆனது.

ஸ்பின்

ஸ்பின்

இதற்காக அஸ்வின் சிறப்பு பயிற்சி எடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சிறப்பு பயிற்சி அஸ்வினுக்கு கை கொடுத்தது. இவர் போட்ட 13வது ஓவரில் நினைத்தபடி பந்து ஸ்விங் ஆனது. பந்தை அஸ்வின் உள்ளே வீசினார். இதை கணிக்க முடியாமல் மேத்யூ சுற்றினார்.

விக்கெட்

விக்கெட்

பீல்டிங் செய்து கொண்டு இருந்த ஜடேஜா வேகமாக ஓடி சிறப்பாக கேட்ச் பிடித்தார். மேத்யூ அவுட் ஆகி சில நிமிடங்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுட்டானார். அஸ்வின் போட்ட 15வது ஓவரில் ஸ்மித் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இரண்டு விக்கெட்

இரண்டு விக்கெட்

அஸ்வின் இதன் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார். கோலி கேப்டனாக இருக்கும் போது அஸ்வினுக்கு 30 ஓவர்களுக்கு பின்தான் பவுலிங் கொடுப்பார். பலமுறை அஸ்வினை கோலி வேண்டும் என்றே புறக்கணித்துள்ளார். இப்போதும் கூட துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படவில்லை. கோலி இல்லாத நிலையில் அஸ்வினை ரஹானே பயன்படுத்தி உள்ளார்.

பயன்படுத்தினார்

பயன்படுத்தினார்

அஸ்வினுக்கு உரிய முக்கியத்துவத்தை ரஹானே கொடுத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கோலிக்கு தகுந்த பதிலடியை அஸ்வின் கொடுத்துள்ளார். அஸ்வினை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும், இதுதான் சரியான பவுலிங் ரொட்டேஷன் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Story first published: Saturday, December 26, 2020, 11:58 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+