Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க ஊருக்கு வா.. இடைவிடாத ஸ்லெட்ஜிங்.. அஸ்வின் கொடுத்த பதிலடி.. கப்சிப் ஆன ஆஸி. கேப்டன்.. செம பன்ச்

சிட்னி : சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ய அஸ்வின் போராடிக் கொண்டு இருந்த போது ஸ்லெட்ஜிங் செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.

அப்போது செமயான பதிலடி கொடுத்து அவர் வாயை அடைத்தார் அஸ்வின். அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆனது.

மேலும், அஸ்வின் டிரா செய்ய போராடிய விதம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவரது பதிலடியும் அவர்களை உற்சாகம் கொள்ள வைத்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா. புஜாரா, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து ஆடினாலும், அவர்கள் ஆட்டமிழந்த பின் இந்திய அணி டிரா செய்ய முயற்சி செய்தது. ஹனுமா விஹாரி - அஸ்வின் தடுப்பாட்டம் ஆடி டிரா செய்ய போராடினர்.

சீண்டிய கேப்டன்

சீண்டிய கேப்டன்

அப்போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் அஸ்வினை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தார். ஒரு முறை அடுத்து நடைபெற உள்ள காபா டெஸ்ட் போட்டியை காண காத்திருக்க முடியவில்லை என்றார். காரணம், அங்கே வெளிநாட்டு அணிகள் வெற்றி பெறுவது மிகக் கடினம்.

அஸ்வின் பதிலடி

அஸ்வின் பதிலடி

அப்போது அஸ்வின் பதிலடி கொடுத்தார். "அது எப்படி என்றால் நீங்கள் இந்தியா வந்தால் அதுதான் உங்களுக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்" என்றார். டிம் பெயின் சுமாராகவே ஆடி வருகிறார். அவரது கேப்டன்சியில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை இழந்தால் அவர் அணியில் வாய்ப்பை இழக்க நேரிடும் என கூறி உள்ளார் அஸ்வின்.

பெயின் கப்சிப்

பெயின் கப்சிப்

அஸ்வின் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனார் டிம் பெயின். மேலும், அதன் பின் அவர் கேட்ச்களையும் நழுவ விட்டு தன் அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தார். இந்தியா 131 ஓவர்கள் ஆடி இந்தப் போட்டியை டிரா செய்தது.

Story first published: Monday, January 11, 2021, 13:26 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+