For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் தன்மானத்தை சீண்டிய கம்பீர்? இந்திய அணியில் பிளவு? கோபத்தில் ஓய்வு? வெளியேற போகும் வீரர்கள்

பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து தனது தன்மானத்தை சீண்டியதால் தான் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்தது.

இந்த நிலையில் அஸ்வின் பாதையிலே விளங்குவதாக அறிவித்திருக்கிறார். இந்த மூன்று டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தான் அஸ்வின் அணியை விட்டு வெளியேறி இருக்கலாம் என செய்திகள் வெளியானது.

ravichandran ashwin ind vs aus ashwin retirement

இந்த நிலையில் இந்திய அணியில் எடுக்கப்படும் முடிவுகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உதாரணத்திற்கு அணியின் சீனியர் வீரரான ஜடேஜா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்கவில்லை. இதனால் அவர் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் ஜடேஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஜடேஜா ஏற்படுத்தவில்லை என்றாலும் பேட்டிங்கில் அபாரமாக விளையாடி இந்திய அணியில் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இதேபோன்று தங்களுக்கு வேண்டிய வீரர்களுக்கு மட்டும் அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக இந்திய அணியில் கில் வெளிநாட்டு தொடரில் இதுவரை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் சேர்க்கப்படும் சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேபோன்று கம்பீர், ரோகித் சர்மா சேர்ந்து எடுக்கும் முடிவு விராட் கோலிக்கு உடன்பாடு இல்லை எனும் தெரிகிறது. இதேபோன்று பும்ரா கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவரும் ரோகித் வருகையால் தற்போது துணை கேப்டனாக செயல்படுகிறார். இது அவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்திய அணியில் பல குறைகள் மற்றும் ஒற்றுமையின்மை இருப்பதாகவும் இதன் முதல் வெளிப்பாடுதான் அஸ்வின் ஓய்வு என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி அடுத்தடுத்து சீனியர் வீரர்கள் வெளியேறலாம் என தெரிகிறது.

Story first published: Thursday, December 19, 2024, 13:48 [IST]
Other articles published on Dec 19, 2024
English summary
Ind vs aus- Ashwin retirement arises speculation over rift in team india அஸ்வின் தன்மானத்தை சீண்டிய கம்பீர்? இந்திய அணியில் பிளவு? கோபத்தில் ஓய்வு? வெளியேற போகும் வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+