Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்ல காலம் பிறந்தாச்சு.. கோலியின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர்.. குஷியான ரசிகர்கள்.. என்ன சொன்னார்?

மும்பை: விராட் கோலி சமீப காலமாக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் செயல்பாடு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அவர் அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரன் குவிக்கவில்லை என்றால் ஓய்வு பெற வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் எனவும் சிலர் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் என்ன? என்பது பற்றி ஜோதிடர் ஒருவரிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு அந்த ஜோதிடர் அளித்த பதில் விராட் கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ind vs aus india australia

இது பற்றி அந்த ஜோதிடர் பேசுகையில், "சமீப காலமாக என்னிடம் விராட் கோலி எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? அவர் நன்றாக விளையாடுவாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு எனது பதில் ஒன்று மட்டுமே. மக்கள் அனைவரும் விராட் கோலி ஆடுவதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார்." என்றார்.

மேலும், "அடுத்து இந்திய அணி ஆட உள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவர் அதிக ரன் குவிப்பார். இனி வரும் சில ஆண்டுகளில் விராட் கோலி தனது உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவர் சிறப்பாக விளையாடுவார்." என்றார் அந்த ஜோதிடர்.

இந்த பதிலால் விராட் கோலி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 2027 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது அவருக்கு 38 வயது ஆகியிருக்கும். அதுவரை அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என அந்த ஜோதிடர் கூறி இருக்கிறார்.

விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் அவர் இனி அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதாலும், சிறிய அணிகளுடனான ஒரு நாள் தொடர்களில் விராட் கோலி பங்கேற்பதில்லை என்பதாலும் இனி விராட் கோலியை நாம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகம் பார்க்கலாம்.

Story first published: Friday, November 8, 2024, 10:47 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+