Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: 13.2 ஓவரிலே கதையை முடித்த ஆஸ்திரேலியா.. ஹாட்ரிக் மிஸ் செய்த பும்ரா.. இந்தியா தோல்வி

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது t20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. தொடக்கத்தில் 10 பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் இரண்டு ரன்களிலும், கேப்டன் சூரியகுமார் ஒரு ரன்னிலும், திலக் வர்மா டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர்.

Ind vs Aus

அக்சர் பட்டேல் ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான ரன் அவுட்டில் சிக்கினார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா தனியாக நின்று போராடி 37 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். ஹர்ஷித்ரானா 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினர். 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது திலக் வர்மாவின் அபாரமான கேட்ச் ஆல் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி அடங்கும். ஜோஸ் இங்கிலீஷ் 20 ரன்கள் எடுத்தார். இதைப் போன்று டிம் டேவிட் ஒரு ரன் எடுத்திருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது பும்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பும்ரா ஹாட்ரிக் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மிஸ் ஆனது. 13.2 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Friday, October 31, 2025, 17:16 [IST]
Other articles published on Oct 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+