Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம அதிரடி.. டார்கெட்டை ஊதித் தள்ளிய ஆஸி.. முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய இந்திய அணி.. படுதோல்வி!

செம அதிரடி.. டார்கெட்டை ஊதித் தள்ளிய ஆஸி.. முதல் டெஸ்டில் மண்ணைக் கவ்விய இந்திய அணி.. படுதோல்வி!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்ட இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி இருந்தது. முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை கடுமையாக சோதித்து 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் ஆடினாலும், ரன் குவிக்க முடியவில்லை. 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் சொதப்பல்

இரண்டாம் இன்னிங்க்ஸ் சொதப்பல்

இரண்டாம் இன்னிங்க்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது, மூன்றாம் நாள் காலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தது.

புயலாய் தாக்கிய இருவர்

புயலாய் தாக்கிய இருவர்

ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் வீசிய ஓவர்களில் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. கோலி, புஜாரா, ரஹானே போன்ற சிறந்த அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் கூட அவர்களிடம் சிக்கினார்கள்.

குறைந்த இலக்கு

குறைந்த இலக்கு

இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடியது. அஸ்வின் லாபுஷாக்னே விக்கெட்டை வீழ்த்தினார். மேத்யூ வேட் ரன் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

எனினும், ஆஸ்திரேலியா 21 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 51 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.

Story first published: Saturday, December 19, 2020, 13:58 [IST]
Other articles published on Dec 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+