Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: உலககோப்பைக்கு தயாராகி வருகிறோம்.. அடுத்த 3 போட்டியிலும் வெல்வோம்.. ஆஸி. கேப்டன் மார்ஷ்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 126 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்கள் எல்லாம் எட்டி அசத்தியது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பேசியதை தற்போது பார்க்கலாம். இந்த டாஸ் வென்றது உண்மையிலேயே நல்ல விஷயம். ஆடுகளம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது. அதை சிறப்பாக எங்கள் அணி வீரர்கள் பயன்படுத்தினார்கள்.

Ind vs Aus Mitchel Marsh

ஜோஸ் ஹேசல்வுட் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் ஆரம்ப கட்டத்தில் இரண்டு விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடந்தது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு நாங்கள் எங்கள் அணியை தயார் செய்து வருகிறோம்.

உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வகையில் 25 வீரர்களை நாங்கள் தயார் செய்திருக்கின்றோம். தேவை ஏற்பட்டால் யார் வேண்டுமானாலும் உலகக்கோப்பை தொடரில் வந்து விளையாடுவார்கள். எங்கள் அணியில் நீங்கள் எப்போதும் ஒருவர் என்ற ஒரு நினைப்பை நாங்கள் வழங்குகிறோம்.

இதன் மூலம் ஒவ்வொருவரும் இணைந்து இருக்கின்றோம். 2000 ரன்களை கடந்தது நினைக்கும் போது கொஞ்சம் பதற்றமாக தான் இருக்கின்றது. ஆனால் எப்படியோ அதை கடந்து விட்டேன். நான் பேட்டிங் செய்யும்போது ஹெட், என்னுடன் இருந்து எனக்கு உதவினார். என் மீது இருக்கும் நெருக்கடியை குறைக்க அவர் முயற்சி செய்தார். அடுத்த மூன்று போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.

இந்திய கிரிக்கெட் அணி மீது எனக்கு எப்போதுமே நல்ல மரியாதை இருக்கிறது. இதனால், இந்த தொடர் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த போட்டியில் பௌலர்கள் தான் எங்களுக்கு வெற்றியை தேடி தந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து ஆக்ரோஷமாக பந்து வீசி எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 31, 2025, 19:05 [IST]
Other articles published on Oct 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+