Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பைக்கு சொன்ன அதே வசனம்.. ரிஷப் பண்ட்க்கு எச்சரிக்கை தந்த பாட் கம்மின்ஸ்.. வம்பிழுக்கும் ஆஸி

மும்பை : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்ட போது பலரும் ஆஸ்திரேலியா தவறு செய்து விட்டதாக கருத்து தெரிவித்தனர். ஒரு வேகப்பந்துவீச்சாளரால் தொடர்ந்து கேப்டனாக சரியாக செயல்பட முடியாது என்றும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைத்து ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக பாட் கம்மின்ஸ் வருகிறார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் உலகக் கோப்பை, ஆசஸ் கோப்பை என சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள பல முக்கிய தொடர்களை கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.

ind vs ban border gavaskar trophy cricket pat cummins rishabh pant

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லவில்லை. இதனால் இம்முறை எப்படியாவது பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக தற்போது எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பங்கேற்காமல் முழு வீச்சில் பயிற்சி ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் கம்மின்ஸ் எப்போதுமே களத்தில் விளையாடுவதை மட்டும் நம்பாமல் களத்திற்கு வெளியவும் வாய் பேசி தந்திரமாக செயல்படுவார். அப்படித்தான் 50 ஓவர் உலகக் இறுதிப் போட்டிக்கு முன்பு ஒரு லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத் மைதானம் இந்திய ரசிகர்களால் நிரம்பி இருக்கும். அந்த இந்திய ரசிகர்களை கத்தவே விடாமல் அமைதியாக்குவது தான் எங்களுடைய முதல் பணி என்று அவர் கூறியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் கம்மின்ஸ் செய்தும் காட்டினார். இந்த நிலையில் தற்போது அதே ஒரு வசனத்தை கம்மின்ஸ் மீண்டும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்டை பார்த்து கூறி இருக்கிறார். பண்ட், ஆஸ்திரேலியா மண்ணில் 12 இன்னிங்சில் விளையாடி மொத்தமாக 624 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 62 ரன்கள் ஆகும்.

அதிகபட்ச ஸ்கோர் 159 ரன்கள் ஆகும். பண்ட், 2021 ஆம் ஆண்டு காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்சில் 89 ரன்கள் அடித்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு காபா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கு தொடரை கைப்பற்றியது.

இதனால் இம்முறை ரிஷப் பண்டை, அமைதியாக்குவது எங்களுடைய முதல் பணி என அவர் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடைசி 2 தொடர்களில் ரிஷப் பண்ட், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் அவரை இம்முறை அமைதியாக்க நாங்கள் முயற்சி செய்வோம். ரிஷப் பன்ட் திடீரென்று ரிவர்ஸ் ஷாட் ஆடுவார்.

அது உண்மையிலேயே பிரம்மிக்க தக்க ஷாட் ஆக இருக்கும். இதன் மூலம் அவர் எத்தகைய பேட்ஸ்மேன் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். தற்போது ஒவ்வொரு அணியிலும் பண்ட், போல் இரண்டு வீரர்கள் எதிரணி நெருக்கடி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த வீரர்கள் எல்லாம் அதிரடியாக விளையாடுவதில் கில்லிகள். நாம் வந்து வீசும் போது கொஞ்சம் தவறு செய்தால் கூட அவர்கள் அதனை பயன்படுத்தி ரன்கள் சேர்ப்பார்கள் என்று கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நகரில் வரும் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது.

Story first published: Wednesday, September 25, 2024, 20:38 [IST]
Other articles published on Sep 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+