Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம் கோன்ஸ்டாஸ் மூலம் பதிலடி.. 2 முறை இந்திய அணி செய்த ட்ரிக்.. இம்முறை ஆஸ்திரேலியா கொடுத்த ட்விஸ்ட்

மெல்போர்ன்: 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அணி தொடக்க வீரர்களை மாற்றி வெற்றியை பெற்றது. அதனை இம்முறை ஆஸ்திரேலியா அணி பின்பற்றி சாம் கோன்ஸ்டாஸ் மூலமாக இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளதாக அந்த அணி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

2018-19 ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முரளி விஜய் - கேஎல் ராகுல் இருவரும் தான் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் 2 போட்டிகளுக்கு பின் திடீரென மயங்க் அகர்வால் அழைக்கப்பட்டதோடு, மற்றொரு தொடக்க வீரராக விஹாரி கொண்டு வரப்பட்டார். இதனால் குழம்பிய ஆஸ்திரேலியா அணி, இளம் வீரர்களுக்கான திட்டத்தை செயல்படுத்த முடியாமல் திண்டாடியது.

ind vs aus virat kohli sam konstas vs

அந்த சுற்றுப்பயணத்தில் மயங்க் அகர்வால் கொடுத்த தொடக்கம் புஜாரா மற்றும் விராட் கோலி இருவருக்கும் மிகப்பெரிய பலனை கொடுத்தது. அதேபோல் 2021-22 சுற்றுப்பயணத்தில் மயங்க் அகர்வால் - பிரித்வி ஷா தான் தொடக்க வீரர்களாக பயணித்தனர். ஆனால் முதல் போட்டிக்கு பின் பிரித்வி ஷாவும், 2வது போட்டிக்கு பின் மயங்க் அகர்வாலும் நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கி சிறந்த பங்களிப்பை அளித்தனர். காபாவில் ஆஸ்திரேலியா அணி அடைந்த டெஸ்ட் தோல்விக்கு சுப்மன் கில்லின் பங்களிப்பு மிக முக்கியமானது. 2 முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்ற போதும், தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் தொடக்க வீரர்களை மாற்றினாலும், மீண்டும் அனுபவ வீரர்கள் பக்கமே சென்றது. ஆரோன் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், புகோவ்ஸ்கி என்று மாற்றப்பட்டும் அந்த அணிக்கு பலன் கொடுக்கவில்லை. இதில் புகோவ்ஸ்கி சிறப்பாக செயல்பட்டாலும், அவரின் காயம் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

ஆனால் இந்திய அணி நேரடியாக இளம் வீரர்களை அறிமுகம் செய்தது மிகப்பெரிய பலனை கொடுத்தது. சுப்மன் கில், மயங்க் அகர்வால் இருவருமே நேரடியாக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இம்முறை பார்டர் கவாஸ்கர் டிராபியில் நேதன் மெக்ஸ்வீனியை வைத்து ஆஸ்திரேலியா அணி தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால், அவரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக 19 வயதேயான இளம் வீரரான சாம் கோன்ஸ்டாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பிக் பாஷ் டி20 தொடரில் சில நாட்களுக்கு முன்பு தான் அவர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தார். அதேபோல் முதல்தர கிரிக்கெட்டில் கூட அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. இருந்தாலும் தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியம் அளித்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் 19 வயது வீரரை அறிமுகம் செய்வது எளிதான விஷயமல்ல. இந்த நிலையில் நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்யப்பட்ட கோன்ஸ்டாஸ், பும்ராவையே ஒரு கை பார்த்துள்ளார்.

முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 65 பந்துகளில் 60 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். இதனால் இந்திய அணியை பின்பற்றி தொடக்க வீரர்களை மாற்றும் முடிவுக்கு வந்த ஆஸ்திரேலியா அணியின் திட்டத்திற்கு சிறப்பான பலன் கிடைத்திருப்பதாக அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 26, 2024, 12:43 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+