IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு செம அடி.. மழை வைத்த ட்விஸ்ட்.. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது
பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடிய மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்திய அணி 2.1 ஓவர்கள் ஆடிய நிலையில் கடும் மழை பெய்தது. அதன்பின் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து போட்டி டிராவில் முடிந்ததாக அம்பயர்கள் அறிவித்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஆடிய இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஐந்தாம் நாள் அன்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

இந்திய அணிக்கு 275 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 53 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், ஐந்தாம் நாளின் இரண்டு பகுதி ஆட்டம் மட்டுமே மீதமிருந்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடியது. அந்த அணி விரைவாக ரன் சேர்த்து இந்திய அணிக்கு 300 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்து வெற்றிக்காக முயற்சிக்க நினைத்தது. ஆனால், 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது. இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற இலக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications