Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சும்மா விட மாட்டோம்.. ஆயுதத்தை கையில் எடுத்த ஆஸி.. செம சிக்கலில்! கேப்டன் ரஹானே

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தால் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இழக்கும்.

இந்த நிலையில், இந்திய அணியை தடுத்து நிறுத்த ஆஸ்திரேலியா அனைத்து வகைகளிலும் முயன்று வருகிறது.

காயம்

காயம்

அதன் ஒரு பகுதியாக சிட்னி மைதானத்தை அதிக பவுன்சர்கள் வீச எளிதாக மாற்றி அமைத்துள்ளது. இந்திய அணியில் அனுபவ பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் காயத்தால் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், ஆஸ்திரேலியா பிட்ச்சை இவ்வாறு மாற்றி உள்ளது.

அனுபவம் குறைவு

அனுபவம் குறைவு

தற்போது இந்திய அணியில் பும்ரா மட்டுமே அனுபவ வேகப் பந்துவீச்சாளர். முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி சர்வதேச டெஸ்ட் அனுபவமற்ற வேகப் பந்துவீச்சாளர்கள். எனவே, இந்திய அணியை விட பவுன்ஸ் ஆகும் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என கருதப்படுகிறது.

உடலை பதம் பார்க்கலாம்

உடலை பதம் பார்க்கலாம்

மேலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள் உடலை பதம் பார்க்கும் வகையில் பந்து வீசவும் வாய்ப்பு உள்ளது. அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த திட்டம் அவர்களுக்கு எதிராக மாறவும் வாய்ப்பு உள்ளது.

திட்டம்

திட்டம்

முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பும், அந்நாட்டு ஊடகங்களும் இந்திய அணி வீரர்கள் பாதுகாப்யு வளையத்தில் இருந்து வெளியேறி விதிகளை பின்பற்ற மறுப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கி வருகிறார்கள். அதுவும் இந்திய அணியை அழுத்தத்தில் வைத்திருக்கும் திட்டம் என சிலர் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, January 6, 2021, 13:26 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+