Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த நூற்றாண்டில் இப்படி நடந்ததே இல்லை.. தவித்த ஆஸி. அணி.. தெறிக்கவிட்ட இந்தியா.. தரமான சம்பவம்!

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை விட படு நிதானமாக ஆடியது.

முதல் ரன்னை எடுக்கவே நீண்ட நேரம் ஆனது. இந்த நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அணி முதல் ரன்னை எடுக்க இத்தனை நேரம் எடுத்துக் கொண்டதே இல்லை.

அப்படி ஒரு மோசமான ஆட்டத்தை ஆடியது ஆஸ்திரேலியா. இந்தியா பந்துவீச்சில் மிரட்டியது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சாளர்களை இடைவிடமால் பந்து வீச வைத்து அச்சுறுத்தியது. அப்போது இந்திய அணி தொடர்ந்து ரன்னே அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடியது.

புஜாரா - கோலி

புஜாரா - கோலி

புஜாரா - விராட் கோலி இணைந்து ஏகப்பட்ட மெய்டன் ஓவர்கள் ஆடி ஆஸ்திரேலிய அணியை சோதித்தனர். புஜாரா 160 பந்துகளில் 43 ரன்களும், கோலி 180 பந்துகளில் 74 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இதே திட்டத்தை ஆஸ்திரேலிய அணியும் செயல்படுத்தியது.

திகைக்க வைத்தனர்

திகைக்க வைத்தனர்

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் மேத்யூ வேட் - ஜோ பர்ன்ஸ் தொடர்ந்து மெய்டன் ஓவர்கள் ஆடி திகைக்க வைத்தனர். உமேஷ் யாதவ், பும்ரா வீசிய முதல் நான்கு ஓவர்களில் இந்த ஜோடி ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

முதல் ரன்

முதல் ரன்

ஐந்தாவது ஓவரின் 4வது பந்தில் வேட் பவுண்டரி அடித்தார். அதுதான் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் எடுத்த முதல் ரன். முதல் ரன்னை எடுக்க ஆஸ்திரேலிய அணி 28 பந்துகளை எடுத்துக் கொண்டது.

மோசம்

மோசம்

ஆஸ்திரேலிய அணி இந்த நூற்றாண்டில் இதுவரை ஒரு டெஸ்ட் இன்னிங்க்ஸில் முதல் ரன்னை எடுக்க இத்தனை பந்துகளை எடுத்துக் கொண்டதே இல்லை. அந்தா வகையில் இந்த இன்னிங்க்ஸ் மோசமான சாதனை படைத்துள்ளது.

இந்தியா மிரட்டல்

இந்தியா மிரட்டல்

ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாற முக்கிய காரணம் இந்திய அணியின் மிரட்டலான வேகப் பந்துவீச்சு தான். உமேஷ் யாதவ், பும்ரா பல மெய்டன் ஓவர்களை வீசினர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எந்த போட்டியிலும் இந்திய அணி இத்தனை மெய்டன் ஓவர்களை வீசி இருக்க முடியாது.

Story first published: Friday, December 18, 2020, 16:12 [IST]
Other articles published on Dec 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+