Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பயம் இருக்கணும்.. பம்மிப் பதுங்கிய ஆஸி. அணி.. யார்க்கர் கிங் நட்டி.. தரமான சம்பவம்!

சிட்னி : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தினார்.

அது யார்க்கர் கிங் நடராஜன் தான். அவரைத் தவிர மொத்தமாக இந்திய அணியின் பந்துவீச்சு சொதப்பியது.

மற்ற வீரர்கள் தடுமாறிய போதும் நடராஜன் எந்த பதற்றமும் இன்றி துல்லியமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை மிரட்டினார்.

நடராஜன்

நடராஜன்

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தது. போட்டியின் ஐந்தாவது ஓவரை நடராஜன் வீசினார். தான் வீசிய முதல் ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை சாய்த்தார்.

விக்கெட்

விக்கெட்

டிஆர்சி ஷார்ட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நடராஜனுக்கு கேப்டன் கோலி தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. அவரை கடைசி ஓவர்களில் பயன்படுத்த வேண்டி திட்டமிட்டார்.

அடக்கம்

அடக்கம்

எனினும் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியாமல் அவ்வப்போது நடராஜன் ஓவர்களை பயன்படுத்தினார். மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிரடி ஆட்டம் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் நடராஜன் ஓவரில் மட்டும் அடக்கமாக ஆடினர்.

கட்டுக் கோப்பான பந்துவீச்சு

கட்டுக் கோப்பான பந்துவீச்சு

அவரது ஓவரில் பவுண்டரி அடிக்கவே முயற்சி செய்யவில்லை. நடராஜன் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் 35 முதல் 51 ரன்கள் வரை வாரி இறைத்து இருந்தனர்.

நிரந்தர இடம்

நிரந்தர இடம்

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தன் முத்திரையை பதித்து மிரட்டி இருக்கிறார் நடராஜன். 3 சர்வதேச போட்டிகளில் 7 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தனி ஆளாக ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணியையே மிரட்டி உள்ளார். அவர் இப்போதே இந்திய அணியின் நிரந்தர பந்துவீச்சாளராக மாறி இருப்பதாகவே தோன்றுகிறது.

Story first published: Sunday, December 6, 2020, 17:34 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+