அப்படிலாம் விட்ற முடியாது.. இந்தியாவின் ரெக்கார்டுக்கு வேட்டு.. ஆஸி. பரபர திட்டம்!
கான்பெர்ரா : இந்திய அணியின் டி20 ரெக்கார்டு ஒன்றை குறி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
தற்போதைய டி20 தொடரில் அந்த ரெக்கார்டை காலி செய்ய ஆஸ்திரேலிய அணி திட்டம் வகுத்து வருகிறது.
இந்தியா இந்த தொடரின் மூன்று டி20 போட்டிகளையும் வென்றால் மட்டுமே அதை தடுக்க முடியும்.

தோல்வி அடையவில்லை
இந்திய அணி கடைசியாக ஆடிய 9 டி20 போட்டிகளில் தோல்வி அடையவில்லை. இது இந்திய அணியின் மிகப் பெரிய சாதனை ஆகும். ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றால் இதை 12 ஆக மாற்றலாம்.

சூப்பர் ஓவர் வெற்றிகள்
கடந்த 9 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. மேலும், அந்த 8 வெற்றிகளில் இரண்டு சூப்பர் ஓவர் வரை சென்று கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடினம்
ஆஸ்திரேலிய அணி இந்த டி20 தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினாலும் இந்திய அணியின் இந்த சாதனைப் பயணம் தடைபடும். இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது கடினம் என்றே கருதப்படுகிறது.

தடுமாற்றம்
ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி தடுமாறியது. இரண்டு மோசமான தோல்விகளுக்கு பின் ஒரு ஆறுதல் வெற்றி பெற்றது. சரியான அணியை அடையாளம் காண முடியாமல் கேப்டன் கோலி தடுமாறினார். டி20 தொடரில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications