
டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது. தற்போது இரு அணிகளும் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

வார்னர் காயம்
ஆஸ்திரேலிய அணி இந்த முறை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் களமிறங்குவதால் இந்திய அணிக்கு சிக்கல் என கூறப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் முதல் டெஸ்டில் காயம் காரணமாக ஆட மாட்டார் என கூறப்படுகிறது.

வில் புகோவ்ஸ்கி
வார்னருக்கு பதில் துவக்க வீரராக இறங்க இருந்தார் வில் புகோவ்ஸ்கி. அவர் பயிற்சிப் போட்டியில் தலையில் காயம் ஏற்பட்டு பாதியில் விலகினார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிய வந்துள்ளது. இதன் மூலம் யாரை துவக்க வீரராக இறக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இருவர்
இவர்கள் தவிர கேமரான் கிரீன் மற்றும் ஹாரி கான்வே காயத்தில் சிக்கி உள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு டெஸ்ட் அணி வீரர்கள் காயத்தில் சிக்கியதால் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நிலைமையை சமாளிக்க முடியாமல் சிக்கி உள்ளது.

உள்ளே வந்த இளம் வீரர்
டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி இல்லாத நிலையில் மார்கஸ் ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹாரிஸ்-ஐ துவக்க வீரராக ஆட வைக்க பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஷான் மார்ஷ்-ஐ ஆட வைக்கவும் ஒரு திட்டம் இருப்பதாக முன்பு கூறப்பட்டது.

ஆஸி. அணி சிக்கல்
இந்திய அணியில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஆட மாட்டார் என்பதால் இந்திய அணிக்கு சிக்கல் என கூறி வந்த விமர்சகர்கள், தற்போது ஆஸ்திரேலிய அணி நிலையை பார்த்து பரிதாபப்பட துவங்கி உள்ளனர். இரு அணிகளுமே முக்கிய வீரர்களை இழந்து தங்கள் பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











