இன்னும் 100 ரன் எடுத்தால்.. ஆஸி. செம பிளான்.. இந்திய அணி செய்த தவறு.. மாறிய காட்சி!
சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சொதப்பி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸிலும் ரன் குவித்து வருவதால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
300 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் இந்தியா வெற்றி பெறுவது கடினம். அதை நோக்கி ஆஸ்திரேலியா முன்னேறி வருகிறது.

முதல் இன்னிங்க்ஸ்
முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணியை 338 ரன்களுடன் தடுத்து நிறுத்தியது இந்திய அணி. அதன் பின் 96 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்து நம்பிக்கை அளித்தது. ஆனால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் காட்சிகள் மாறியது.

கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்களை விரைவாக வீழ்த்தினார். இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம் அடைந்து மூன்று ரன் அவுட் மூலமூம் விக்கெட்களை இழந்தது. இந்திய அணியின் தவறுகளால் ஆஸ்திரேலியா பக்கம் போட்டி மாறியது.

இந்தியா ஸ்கோர்
முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா 94 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து அந்த அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தாலும், அதன் பின் வந்த ஸ்டீவ் ஸ்மித், லாபுஷாக்னே நிலையாக ஆடியதால் 103 ரன்களை எட்டியது.

300 ரன்கள்
மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 100 ரன்களை எடுத்தால், இந்திய அணிக்கு 300 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும். இந்திய அணி வெற்றி பெறுவது கடினமே.


Click it and Unblock the Notifications