Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1.4 லட்சம் ரசிகர்களை சைலண்ட் செஞ்சீங்களே.. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வெல்லுமா? பதறிய கம்மின்ஸ்!

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றும் என்று அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொல்லாமல் நழுவி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பேட் கம்மின்ஸ் சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த அணியாலும் கம்பேக் கொடுக்க முடியும்.

ind vs aus sunil gavaskar virat kohli

அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை விளையாடிய 2 முறையும் இந்திய அணி கோப்பையுடன் திரும்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் கோப்பை மீது கை வைக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி திண்டாடி வருகிறது. சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியக 2 முறை இந்திய அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக உள்ளது.

இதற்காக சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வெடுத்து தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியை வம்புக்கு இழுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடர்பாகா ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிஐ வீழ்த்தி இருக்கிறோம்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் எதுவும் சாதாரண போட்டியாக இருக்காது. இரு அணிகளுக்கும் வெல்வதற்கு சரி பாதி வாய்ப்பு எந்த நேரத்தில் இருக்கும். அதனால் தான் பார்டர் கவாஸ்கர் டிராபியை எதிர்நோக்கியுள்ளேன். கடந்த 2 முறையும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணிலேயே தோல்வியடைந்தோம். அதற்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம்.

இந்திய அணியும் எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளோம். அதுதான் இம்முறை எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணி வெல்லுமா என்ற கேள்விக்கு, சுற்றி வளைத்து கம்மின்ஸ் பதில் அளித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் நடந்த ஆஷஸ் தொடர், இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் என்று பேட் கம்மின்ஸ் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் தொட்டதில் எல்லாம் வெற்றியை சுவைத்து வருகிறார். அதிலும் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் 1.4 லட்சம் இந்தியர்களையும் சைலண்ட் செய்வேன் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார்.

இதன் மூலமாக பேட் கம்மின்ஸ்-ன் கிரிக்கெட் கரியர் கிராஃப் எங்கோ எகிறிவிட்டது. வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் பேட் கம்மின்ஸ், இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி காட்டுவோம் என்று பேசாமல் அமைதி காத்துள்ளார். சமபலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இரு அணிகளும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று பதில் அளித்து எழுந்து சென்றுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டைல் எப்போதும் இருக்க இருக்காது. ஏனென்றால் எப்போதும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வாயால் சவால் விட்டு, வெல்வதே ஆஸ்திரேலியாவின் ஸ்டைல். ஆனால் கம்மின்ஸ் வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்திருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, September 4, 2024, 11:42 [IST]
Other articles published on Sep 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+