Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிக்க முடியலை.. அதுக்காக இப்படியா பண்ணுவீங்க? இந்திய வீரர்களை சீண்டிய ஆஸி. மீடியா!

சிட்னி : ஆஸ்திரேலிய அணியுடன் கிரிக்கெட் என்றால் அது களத்தில் மட்டும் ஆடும் ஆட்டமாக இருக்காது.

களத்துக்கு வெளியே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பும், அந்நாட்டு ஊடகங்களும் ஏற்படுத்தும் சிக்கல்களை சமாளித்து தான் கிரிக்கெட் ஆட வேண்டும்.

ஆஷஸ் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா இது போன்ற வியூகத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கடைபிடித்து வருகிறது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

கடந்த காலங்களில் இந்திய அணியும் இதே போல சிக்கி உள்ளது. எனினும், ரிக்கி பாண்டிங் காலத்துக்கு பின் இந்திய அணியை ஆஸ்திரேலியா பெரிய அளவில் சீண்டவில்லை. ஆனால், கடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே முதல்முறையாக வீழ்த்தி தொடரை கைப்பற்றி இருந்தது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வரை ஆஸ்திரேலிய அணிக்கு எல்லாம் சரியாக இருந்தது. முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது அது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

தோல்வியின் விளைவா?

தோல்வியின் விளைவா?

கடந்த இரு நாட்களாக இந்திய அணியை அழுத்தத்தில் ஆழ்த்தும் செயல்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தோல்வியின் விளைவா? அல்லது இயல்பாகவே நடக்கிறதா? என தெரியவில்லை. அந்த அளவுக்கு இந்திய வீரர்கள் வெளியில் சென்ற விவகாரம், இந்திய அணிக்கு கடும் லாக்டவுன் என பிரச்சனைகள் படை எடுத்து வருகின்றன.

ஆஸ்திரேலிய ஊடகங்கள்

ஆஸ்திரேலிய ஊடகங்கள்

இதில் ஆஸ்திரேலிய ஊடகங்களின் பங்கு மிக அதிகம். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் சிறிது நேரம் செலவிட்டுள்ளனர். அது பாதுகாப்பு வளையத்தை மீறிய செயல் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

கடும் லாக்டவுன் விதிகள்

கடும் லாக்டவுன் விதிகள்

ஆனால், உண்மையில் அங்கே என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பிசிசிஐ அது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேனில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு கடும் லாக்டவுன் விதிகள் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

அமைச்சர் பேச்சு

அமைச்சர் பேச்சு

இதை சில இந்திய வீரர்கள் எதிர்ப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியானது. அதை அமைச்சர் ஒருவரிடம் கூறி கருத்து கேட்டுள்ளது ஒரு ஆஸ்திரேலிய ஊடகம். அதற்கு அந்த அமைச்சர் விதிகளை பின்பற்ற முடியாது என்றால் இந்திய அணி இங்கே வரவே வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல கூறி இருக்கிறார்.

அழுத்தம்

அழுத்தம்

இதில் இருந்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்க முடிவு செய்துவிட்டது தெரிகிறது. இந்திய அணிக்கு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளது அந்நாட்டு ஊடகங்கள். இதை மீறித்தான் இந்திய அணி அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும்.

Story first published: Sunday, January 3, 2021, 17:58 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+