Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- பும்ராவின் ரசிகரான ஆஸ்திரேலிய பிரதமர்.. விராட் கோலியை புகழ்ந்து பாராட்டு

கென்பேரா : ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் என்பது தேசிய விளையாட்டாகும். அதனால்தான் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை எப்போதுமே ஒரு உயரிய தரத்தில் மக்கள் வைப்பார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எந்த பெரிய அணிகளும் கிரிக்கெட் விளையாடச் சென்றால் அவர்களை அந்நாட்டு பிரதமர் வரவேற்று தேனீர் விருந்து அளிப்பது என்பது அந்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. பும்ரா பந்துவீச்சில் மொத்தமாக எட்டு விக்கெட் வீழ்த்த ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்து அசத்தினார்.

border gavaskar trophy india vs australia test match vs

இந்த சூழலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஆறாம் தேதி அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் 11 அணியுடன் இந்தியா எதிர்கொள்கிறது.

இதனால் இது அணி வீரர்களும் ஆஸ்திரேலிய பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கேன்பேராவில் வந்த இந்திய அணி வீரர்கள் வரிசையாக நிற்க ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பென்சி கைகுலுக்கி உரையாடினார். அப்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

border gavaskar trophy india vs australia test match vs

முதலில் பும்ராவிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் உங்களுடைய பந்து வீச்சு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார். அதற்கு பும்ரா நன்றி என்று கூறினார்.இதனை அடுத்து விராட் கோலியை பார்த்ததும் சிரித்து கைகுலுக்கிய ஆண்டனி ஆல்பம்ஸ், நீங்கள் பெர்த்தில் நல்ல காலத்தை அனுபவித்திருப்பீர்கள்.உங்களுடைய ஆட்டம் பிரமாதமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் எங்கள் அணி பின்னடைவை சந்திக்கிறது என்று எண்ணமே தோன்றாமல் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த விராட் கோலி நாங்கள் எப்போதுமே எங்களுடைய சொந்த ஸ்டைலை வெளிப்படுத்தி விறுவிறுப்பாக்குவோம் என்ற பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் பதிலளித்தார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர் ஒவ்வொருவரையும் சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Thursday, November 28, 2024, 18:27 [IST]
Other articles published on Nov 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+