
கோலி சதம்
இந்திய அணியின் இந்த அட்டகாசமான ஸ்கோருக்கு தொடக்க வீரர் சுப்மன் கில் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்த சூழலில், அதனை முடித்துக்கொடுத்தது விராட் கோலி - அக்ஷர் பட்டேல் ஜோடி தான். 2019ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி இந்த போட்டியில் அந்த காத்திருப்புக்கு முடிவு கொடுத்தார். 364 பந்துகளை சந்தித்த அவர் 186 ரன்களை விளாசினார். விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்ஷர் பட்டேல் 113 பந்துகளில் 79 ரன்களை சேர்த்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் முன்னிலை பெற்றது.

உடல்நலக்குறைவு
இந்நிலையில் தான் விராட் கோலி தனது காய்ச்சலையும் மீறி இந்த ஆட்டத்தை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. விராட் கோலி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனையும் மீறி நாட்டிற்காக விளையாடியதாகவும் அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். இதனையடுத்து கோலிக்கு என்ன ஆனதோ? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அக்ஷர் பட்டேல் பேச்சு
இதுகுறித்து சுவாரஸ்ய தகவலை அக்ஷர் பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு காய்ச்சல் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவர் ரன் ஓடிய விதத்தை பார்த்தால், உடல்நலக்குறைவு என யாருமே கூற மாட்டார்கள். கடும் வெயிலில் பார்ட்னர்ஷிப்பை எல்லாம் மறந்து வேகமாக ஓடினார். அவருடன் விளையாடினாலே எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. கோலியுடன் நான் விளையாட சென்றால், அணி தரப்பில் இருந்து எந்தவொரு அறிவுரையும் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார்.

செட்டிலாக வேண்டும்
அது போன்று தான் நேற்றும், வேகமாக ஆடுவது, டிக்ளரேஷன் போன்ற எந்த அறிவுரையும் கொடுக்கவில்லை. களத்தில் விராட் கோலி தொடர்ந்து பாசிட்டீவாக செட்டாகும் வரை ஆடச்சொன்னார். அதே போன்று செய்தேன். இருவரும் நன்கு செட்டில் ஆன உடன், ஆஸ்திரேலிய பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிட்ச்-ம் ஒத்துழைக்காததால் எங்களுக்கு சுலபமாக இருந்தது. அவர் 100 அடிக்க கூறினார், ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது என அக்ஷர் பட்டேல் கூறினார்.


Click it and Unblock the Notifications











