Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் தொட முடியாத ரெக்கார்டை உடைத்த பாபர் அசாம்

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாபர்ட் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அதிகபட்சமாக 28 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பௌண்டரிகள் அடங்கும்.

pak vs aus babar azam virat kohli mohammed rizwan


146 ஸ்ட்ரைக் ரைட்டை பாபர் அசாம் வைத்திருந்தார். இதன் மூலம் பாபர் அசாம் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பாபர் அசாம் பின்னுக்கு தள்ளியிருக்கிறார். விராட் கோலி 125 போட்டிகளில் 4188 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137 ஆகும்.

இந்த சூழலில் விராட் கோலி கடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். இந்த சூழலில் பாபர் அசாம் , விராட் கோலியை பின்னுக்கு தள்ளியிருக்கிறார். தற்போது பாபர் அசாம், 126 டி20 போட்டிகளில் விளையாடி 4192 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 129 ஆக இருக்கிறது.சராசரி 40.30 ஆக உள்ளது.

தற்போது இந்த பட்டியலில் ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 159 போட்டியில் விளையாடி 4231 ரன்கள் அடித்திருக்கிறார். ரோகித் சர்மாவை முந்த வேண்டுமென்றால் பாபர் அசாம், இன்னும் 39 ரன்கள் அடித்தால் போதும். அதை பாபர் அசாம் செய்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைப்பார்.

எனினும் இந்த போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. விராட் கோலி ரெகார்டை பாபர் அசாம் முறியடித்திருப்பது இந்திய ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் வந்து ஓய்வு பெற்றதன் மூலம் இனி அவர் பாபர் அசாமை முந்த முடியாது. இதனால் விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Monday, November 18, 2024, 20:31 [IST]
Other articles published on Nov 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+