Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியர்கள் வெளியில்.. இந்திய வீரர்கள் கூண்டில்.. என்ன நடக்கிறது? அதிர வைத்த பிசிசிஐ அதிகாரி

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் பிரிஸ்பேன் நகரில் இந்திய அணிக்கு கடும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

அதே சமயம், ரசிகர்கள் அந்த போட்டிக்கு எந்த தடையும் இன்றி அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதை குறிப்பிட்டுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்திய அணி வீரர்களை கூண்டில் அடைத்து வைக்கவே இந்த திட்டம் என அதன் பின்னணி பற்றி கூறி இருக்கிறார்.

அழுத்தம்

அழுத்தம்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளன. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி முக்கிய வீரர்கள் இன்றி வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி தற்போது அழுத்தத்தில் உள்ளது.

கடும் லாக்டவுன்

கடும் லாக்டவுன்

மூன்றாவது டெஸ்ட் சிட்னி நகரில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. அங்கே மற்ற நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு கடும் லாக்டவுன் விதிமுறைகள் அமலில் உள்ளன.

அறையை விட்டு வரக் கூடாது

அறையை விட்டு வரக் கூடாது

அதனால், இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்களும் பிரிஸ்பேன் நகரில் கிரிக்கெட் ஆடச் செல்லும் போது அந்த விதிமுறைகளை பின்பற்றி அறையை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. போட்டியில் ஆட மட்டுமே மைதானம் செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

போட்டியை கை விட திட்டம்?

போட்டியை கை விட திட்டம்?

இது கடுமையான விதிமுறை என்பதால் இந்திய அணி கடைசி டெஸ்ட் ஆடும் மைதானத்தை மாற்றுவது அல்லது அந்தப் போட்டியை கை விடுவது என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் காரசாரமாக கருத்து கூறி உள்ளார்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

"பிரிஸ்பேன் நகரில் இந்திய அணி குவாரன்டைன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் நான்காவது டெஸ்ட் வேறு இடத்தில் நடக்க வேண்டும் அல்லது மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணி விடை பெறும்" என்றார் அந்த அதிகாரி.

கூண்டில் அடைத்து..

கூண்டில் அடைத்து..

மேலும், மற்ற ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு என்ன விதி இருக்கிறதோ அதே விதியை இந்திய அணிக்கும் பின்பற்ற வேண்டும் என பிசிசிஐ கூறி உள்ளது. அப்படி செய்யவில்லை என்றால் இந்திய அணியை கூண்டில் அடைத்து வைத்து மக்களை மகிழ்விக்கச் செய்யும் நடவடிக்கையாகவே இதை பார்க்க நேரிடும் எனவும் கூறி உள்ளார்.

Story first published: Wednesday, January 6, 2021, 12:44 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+